Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுடன் கூட்டணி வைப்பது பெரும் பாவம்... தம்பித்துரை தடாலடி..!

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்ட நிலையில் அதிமுக அரைமயக்கத்தில் இருந்து வருகிறது. பாஜக தோலில் சாயும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொசுக்கென்று ரிவர்ஸ் கியர் போட்டு திருப்பி இருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை. 
 

thambidurai slam bjp over alliance with aiadmk
Author
Tamil Nadu, First Published Jan 17, 2019, 3:58 PM IST

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்ட நிலையில் அதிமுக அரைமயக்கத்தில் இருந்து வருகிறது. பாஜக தோலில் சாயும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொசுக்கென்று ரிவர்ஸ் கியர் போட்டு திருப்பி இருக்கிறார் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை. thambidurai slam bjp over alliance with aiadmk

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு தம்பிதுரை, இன்று கோவை அண்ணா சிலை பகுதியில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ஏழை மக்களுக்காக போராடி பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். கோடநாடு பிரச்சனை என்பது எதிர்கட்சிகளின் புனையப்பட்ட நாடகம். அரசியல் சதிக்காக, தவறான செய்தி மூலம் பிளெக் மெயில் செய்கிறார்கள். இதில் எந்த உண்மையும் இல்லை. மக்களவை தேர்தலில் அதிமுக வெற்றியை சீர்குலைக்க திமுக, காங்கிரஸ் கட்சிகளின் முயற்சி எடுபடாது. தமிழக முதல்வர் மீது அவதூறு கிளப்பும் கோடநாடு சதித்திட்டம் வெற்றி பெறாது. 

பஞ்சாயத்து தேர்தலை மனதில் கொண்டு திமுக தலைவர் ஸ்டாலின் பஞ்சாயத்து, பஞ்சாயத்தாக செல்கிறார். லோக்சபா, சட்டசபை தேர்தல்களில் திமுக வெற்றி பெறாது. குட்கா, கோடநாடு என அதிமுக மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி குளிர் காய்வதே திமுகவின் கொள்கை.thambidurai slam bjp over alliance with aiadmk

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் செல்கிறார்? நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சிக்கு வந்தாலும் மத்திய அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென திமுக முயல்கிறது. இதுதான் காரணம். ஆடிட்டர் குருமூர்த்தி பாஜக தமிழகத்தில் காலுன்ற அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டுமென கூறியிருப்பது கேலிக்கூத்தாக உள்ளது. குருமூர்த்தி விளம்பரத்திற்காக பேசுகிறார்.thambidurai slam bjp over alliance with aiadmk

அதிமுகவை மேலும் வளர்க்க நாங்கள் பாடுகிறோம். பாஜகவை அவர்கள் வளர்க்கட்டும். பாஜகவை சுமந்து செல்ல அதிமுகவினர் பாவம் செய்திருக்கிறார்களா? பாஜகவை காலுன்ற வைக்க அதிமுகவினர் தோளில் சுமந்து செல்ல மாட்டோம். மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் சூழலுக்கு ஏற்ப அதிமுக செயற்குழு கூடி முடிவெடுக்கும். அதை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுத்துவார்கள்’’ என அவர் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios