thambidurai say that there is no split in admk

அதிமுக கட்சிக்குள் பிளவு என்பது இல்லை என்றும் ஓரிரு மனக்கசப்புகள்தான் உள்ளது. இந்த மனக்கசப்புகள் நீங்க அனைவரும் விரைவில் ஒன்று கூடுவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.

அதிமுக இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் கூறி வருகிறார். 

அதனால், நீண்ட நாட்களாக இழுக்கடிக்கப்பட்டு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் திடீரென ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் எனவும் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். 

இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து நேற்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். 

ஜெயலலிதா நினைவிடத்தில் இணைந்து அதிமுக இணைப்பு குறித்த தகவலை வெளியிடுவதாக தகவல் வெளியாகியது. ஆனால் ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். 

இந்த நிலையில், திருவாரூரில் இன்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக கட்சிக்குள் பிளவு என்பது இல்லை. ஓரிரு மனக்கசப்புகள்தான் உள்ளது.

இந்த மனக்கசப்புகள் நீங்கள் அனைவரும் விரைவில் ஒன்று கூடுவோம். இவ்வாறு கூறினார்.