அதிமுக மதவாத கட்சி என பலர் கூறுகின்றனர். இதை ஏற்க முடியாது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில், அவர் செய்தியாளர்களிடம் கூறியாவது:-

அதிமுகவை, பாஜக வழி நடத்துகிறது என கூறி வருகின்றனர். ஆனால், இதுவரை தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிதான் முதலமைச்சராக இருக்கிறார். அப்படி இருக்க, எப்படி அதிமுகவை, பாஜக வழி நடத்தி செல்லும்.

வீண் வதந்திகளை திமுகவினர் பரப்பி வருகின்றனர். அவர்கள், ஆட்சியை பிடிக்க பல்வேறு முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அது கனவிலும் பலிக்காது. 2011ம் ஆண்டுக்கு பிறகு, 2016ம் ஆண்டு மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்த போதே தெரிந்துவிட்டது, மக்கள் திமுகவை வெறுக்கிறார்கள் என்று. பிறகு, எங்களை பற்றி யார் பேசினாலும் கவலையில்லை.

அதிமுகவை மதவாத கட்சி என் கூறி வருகிறார்கள். இது வேடிக்கையான ஒன்று. ஜெயலலிதா இருந்தபோதில் இருந்தே நாங்கள் இதே போன்று இருந்தோம். இப்போதும், அவர் பணியைதான் செய்து கொண்டு இருக்கிறோம். யாரையும் மதத்தின் பெயரால், எந்த கொடுமையும் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.