thambidurai pressmeet in airport

சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கே இரட்டை இலைச் சின்னம் சொந்தம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. சசிகலா தலைமையில் ஓர் அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஓர் அணியும் செயல்பட்டு வருகிறது.

அதிமுக தங்களுக்கே சொந்தம் என இரு அணியினரும் கூறிவருகின்றனர்.சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்தது செல்லாது என ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இல்லாததால், மக்கள் நலக் கூட்டணியுன் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் அங்கு திமுக தலைகீழாக நின்றாலும் வெற்றிபெற முடியாது என தம்பிதுரை தெரிவித்தார்.

சசிகலா தரப்பு அதிமுக ஜெயலலிதா வழியில் பயணிப்பதாகவும், யார் உதவியையும் நாடப்போவதில்லை என்றும் தெரிவித்த தம்பிதுரை, தங்கள் வெற்றி உறுதி என்றும் இரட்டை இலை சசிகலா தலைமையிலான அதிமுகவுக்கே சொந்தம் என்றும் அவர் கூறினார்.
ரேஷன் கடைகளில் தி.மு.க.,நடத்தி வரும் போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.