Thambidurai meeting with edappadi

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தம்பிதுரை எம்.பி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதலமைச்சர் எடப்பாடிக்கு எதிராக தோப்பு வெங்கடாசலம் தலைமையில் புதிய எம்.எல்.ஏக்கள் அணி உருவாகி வருகிறது. மேலும் எடப்பாடி தலைமையில் நடக்கும் நிகழ்ச்சியிலும் இவர்கள் கலந்து கொள்வதில்லை.

இதையடுத்து அதிருப்தி எம்.எல்.ஏக்களான தோப்பு வெங்கடாசலம், செந்தில் பாலாஜி, பழனியப்பன், முருகன், பன்னீர்செல்வம், மோகன் உள்ளிட்ட 8 எம்.எல்.ஏக்களை அழைத்து ஆலோசனை நடத்தினார் எடப்பாடி.

இந்த ஆலோசனையில் உடனடியாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், தம்பிதுரை எம்.பி முதலமைச்சர் எடப்படியை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். எம்.எல்.ஏக்களின் கோரிக்கைக்கு பிறகு நடக்கும் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.