thambidurai dreaming of become next cm

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், யார் முதல்வர்? என்ற கேள்வி எழுந்த போது, தம்மை முதல்வராக்க வேண்டும் என்று சசிகலாவிடம் எவ்வளவோ போராடியவர் தம்பிதுரை.

ஆனால், சசிகலாவோ எடப்பாடியை முதல்வராக்கவே விரும்பினார். ஆனாலும், வெங்கையா நாயுடுவின் செல்லமான மிரட்டலுக்கு பின்னர் பன்னீர்செல்வம் முதல்வர் ஆகிவிட்டார்.

அதன்பிறகு, சசிகலா முதல்வராக வர முடியாத நிலை வந்தபோதும், எவ்வளவோ போராடி பார்த்தும், எடப்பாடிக்கே முதல்வர் வாய்ப்பு கிடைத்தது.

அதனால், தம்முடைய டெல்லி செல்வாக்கை பயன்படுத்தி, தமது விசுவாசத்தை நிரூபிக்க முயற்சித்தார் தம்பிதுரை, ஆனால் அவர் சொல்வது எதுவும் டெல்லியில் எடுபடாத வருத்தத்தில் இருக்கிறார் தினகரன்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரைடு குறித்து, மோடி மற்றும் அமித் ஷாவிடம் பேசிய தம்பிதுரை, இவ்வாறு ஆளும் கட்சி அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினால், மக்களுக்கு அரசு மீதான நம்பிக்கை போய்விடும் என்று கூறி இருக்கிறார்.

மேலும், முதல்வர் எடப்பாடியின் பெயரும் ரைடு பட்டியலில் இருப்பதால், அவ்வாறு செய்யாமல் இருக்குமாறு மிகவும் வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருக்கிறார் தம்பிதுரை.

ஒருவேளை, வேறு வழியின்றி முதல்வர் எடப்பாடி வீட்டில் ரைடு நடத்தினால், அவர் பதவி விலக நேரும். 

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால், நான் முதல்வராக நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் நான் உங்களுக்கு மிகவும் விசுவாசமாக இருப்பேன் என்றும் தம்பிதுரை அவர்களிடம் கூறி இருக்கிறார்.

அதை கேட்ட மோடியும், அமித் ஷாவும், தமிழகத்தில் ஆட்சியை கலைப்பது குறித்து பரிசீலித்து வருவது தெரிந்தும், இவருக்கு இன்னும் முதலமைச்சர் ஆசை போகவில்லையே என்று பேசிக்கொண்டதாக தகவல்.