* பி.ஜே.பி. ஆட்சிக்கு வரும், அப்போது ஐந்து மத்தியமைச்சர் பதவி பெறலாம் என தி.மு.க. தூதுவிட்டுள்ளது. ஆனால் வெளியே நடிக்கிறார்கள்: அமைச்சர் ஜெயக்குமார். (சபாஷ்ணே. ஸ்டாலினுக்கே தெரியாத தி.மு.க.வின் எக்ஸ்க்ளூசிவ் தகவலை அள்ளிவிடுறீங்களேண்ணே! ஆனா, மோடி முதல் முதலா டிஜிட்டல் கேமெராவுல பாஸ்போர்ட் சைஸ் படம் பிடிச்சது உங்களைத்தான் அப்படிங்கிற பெருமையை மட்டும் ஏம்ணே வெளியில சொல்லாம அடைகாக்குறீங்க?)

* காங்கிரஸ் தோற்றுவிடும் எனும் பயத்தில் மூன்றாவது அணிக்கு  செல்ல ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்: அன்புமணி. (சரி தல,  நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்ச மறு நாள்ள இருந்தே உங்க அப்பா ‘மக்கள் நல திட்டங்களில் சமூக நீதி காக்கப்படணும். அதை மாநில, மத்திய அரசுகள் உறுதி பண்ணனும்’ அப்படின்னு போட்டு எரியுறாரே, அப்ப நீங்க அ.தி.மு.க. - பி.ஜே.பி. கூட்டணியை விட்டு விலக ரெடியாகிட்டீங்கன்னு எடுத்தகலாமா? யாரோட தோல்வியை நினைச்சு இந்த பயம்?)

* கருணாநிதியின் ஆட்சியில் எனக்கு வீட்டு வசதி வாரியத்தில் வீடு கொடுக்கப்பட்டது. இப்போதெல்லாம் தமிழகத்தில் ஏழைகளுக்கும் மரியாதை இல்லை, தியாகிகளுக்கும் மரியாதை இல்லை: நல்லகண்ணு. (அதே கருணாநிதியின் ஆட்சியில், தமிழுக்கு சேவை புரிந்தவங்களை எப்படியெல்லாம் வீட்டு வசதி வாரிய வீட்டுல இருந்து ஓட ஓட விரட்டுனாங்கண்ணு தமிழருவி மணியனை கேளுங்கய்யா உண்மை நறுக்குன்னு புரியும்.)

* பி.ஜே.பி. தலைவர் தமிழிசையின் வார்த்தைகள் மூலம் அவர் இன்னமும் அரசியலில் பக்குவம் அடைவில்லை என்பது புலனாகிறது. ராகுல்தான் பிரதமர் என்பதில் கடுகளவும் எங்களிடம் மாற்றமில்லை. அந்த எண்ணம் அப்படியே தொடர்கிறது: ஆர்.எஸ்.பாரதி (ஆனா அரசியலில் பக்குவமான பேச்செல்லாம் உங்க தலைவர் மாதிரி வருமா பாரதிண்ணே? மானம் இருக்கா, சூடு இருக்கா, சொரணை இருக்குதா, சாடிஸ்டு, விவரம் கெட்டவர், நீயா, உங்க அப்பன் வீட்டு சொத்தா...இப்படியெல்லாம் எவ்வளவு பக்குவமா பேசுவாறு நம்ம தளபதி, இல்ல!)

* மம்தாபானர்ஜியிடம் பேச முயன்றார் பிரதமர் மோடி. ஆனால் ‘உங்களிடம் பேச ஒன்றுமில்லை. புதிய பிரதமரிடம் நான் பேசிக்கொள்கிறேன்.’ அப்படின்னு அவரை மறுத்துவிட்டார் மம்தா: கே.எஸ்.அழகிரி. (அதுதான் தலைவரே அரசியல் தெனாவெட்டுங்கிறது. ஆனால், ‘பி.ஜே.பி.யும், காங்கிரஸும் ஒன்றுதான். இருவரையும் ஆள விடக்கூடாது.’ அப்படின்னு மம்தா உங்க கட்சியை கழுவி ஊத்துன பிறகும், நீங்களெல்லாம் அவர் புகழை பாடிட்டு இருப்பதுதான் நம்பிக்கையில்லாத அரசியல்.)