Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் நலமாக இருக்கிறார், எவர் சொன்னாலும் நம்ப மாட்டோம் என்றால் - உங்கள் நோக்கம் தான் என்ன? தா.பாண்டியன் அப்போலோவில் பேட்டி

tha paniyan-talks-about-cm-health
Author
First Published Oct 7, 2016, 2:31 AM IST


அப்போலோ மருத்துவமனையில் அனும்திக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா. பாண்டியன்  சென்று பார்த்தார். பின்னர் அவர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.

 முதலமைச்சர் நலமாக இருக்கிறார். அவரை நேரில் பார்க்க இயலாது. அவர் சிகிச்சையின் முறை அப்படி. ஆனால் அவர் நன்றாக இருக்கிறார் என்று அவரை பார்த்தவர்கள் என்னிடம் சொன்னார்கள். அவர்களை நான் நம்புகிறேன். 

அவர்கள் முதல்வரின் நலம் விரும்பிகள் அவர்களுக்கு பொய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. முதல்வர் நலமாக இருக்கிறார் என்று பார்த்தவர்கள் சொல்கிறார்கள், அவர்களை பார்த்துவிட்டு நான் சொல்கிறேன். எவர் சொன்னால் நம்ப மாட்டோம் , முதல்வரை பற்றி தேவையற்ற வதந்திகளைத்தான் கிளப்புவோம் என்று சொன்னால் உங்கள் நோக்கம் தான் என்ன . வேதனையாக இருக்கிறது. 

tha paniyan-talks-about-cm-health

குறைந்த பட்ச பண்பாடாவது வேண்டாமா? பரபரப்பையும் அதிர்ச்சியும் கிளப்புவதால் எவ்வளவு பாதிப்பு. டாக்டர்கள் அவர் விரைவாக குணமடைந்து வருவதாக சொல்கிறார்கள் அதை நான் நம்புகிறேன் . அவர்கள் வியாபாரிகள் அல்ல. அதன் பிறகும் நம்ப மாட்டோம் என்பது வேதனை தருகிறது. 

அவர் ஆரோக்கியமாக இருந்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டபோது சிலர் தங்கள் உயிரை மாய்த்து கொண்டார்கள்.அப்போது முதல்மைச்சர் அவ்வாறு செய்யாதீர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளாதீர்கள் என்று தெரிவிதார். 

tha paniyan-talks-about-cm-health

இப்போதும் அவர் உடலநலம் தேறி அவரை பேச வாய்ப்பளிக்கப்பட்டால் இப்போதும் அதையே தான் கூறுவார்.அவர் ஆரோக்கியமாக இருக்கிறார். தற்போது அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் மட்டும் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். சொல்கிறவர்களை நான் நம்புகிறேன்.

விரைவில் அவர் பூரண நலத்துடன் வருவார் . இவ்வாறு தா.பாண்டியன் பேசினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios