பயங்கரவாதிகளை இந்தியாவில் ஊடுருவச் செய்வது பாகிஸ்தானின் வேலை, அவர்களை சொர்கத்திற்கு அனுப்புவது இந்தியாவின் வேலை என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் படைத்தளபதியும் தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக போர்கொடி தூக்கிவருகிறது பாகிஸ்தான் , இந்தியாவிற்கு எதிராக பாக் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில். அந்நாட்டின் பிரதமர் உட்பட இராணுவத் தளபதிவரை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இந்தியாவிற்கெதிராக போர் குரல் எழுப்பி வருகின்றனர்.  பாகிஸ்தான் இராணுவ தலைமை ஜெனரல் கியுமர் ஜாவேத் பாஜ்வா சமீபத்தில் இந்நியாவை எச்சரிக்கும் வகையில்  பேசி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அதாவது பாகிஸ்தானில் கடைசி குண்டு இருக்கும்வரை கடைசி வீரன் இருக்கும் வரை இந்தியாவின் மீது குண்டுமழை பொழியும் என்று கூறியிருந்தார் பாஜ்வா.

 

அவரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில்  இந்திய முன்னாள் இராணுவ தளபதியும் மத்திய அமைச்சருமான ஜெனரல் வி.கே சிங் பாகிஸ்தானுக்கு இந்த வீராப்புக்கொன்றும் குறைச்சல் இல்லை.  முதலில் உங்கள் நாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்த்துவிட்டு இந்தியாவிடம் மோத வாருங்கள், உங்கள் நாட்டு மக்களுக்கு உண்ண உணவு இல்லை, நாட்டை நிர்வகிக்க பணம் இல்லை முதலில் நாட்டையும் ராணுவத்தையும் சரி செய்துவிட்டு பிறகு போரைப்பற்றி பேசுங்கள் . ஒன்றுமே இல்லாமல் பாகிஸ்தானுக்கு வாய் சவடால் மட்டும் உதவாது என்று பாகிஸ்தானை கடுமையாக கண்டித்துள்ளார். 

 

அத்துடன் எல்லையில் பயங்கரவதிகளை பாகிஸ்தான் ஊடுருவச் செய்துவருகிறது அது அவர்களின் வேலை, அவர்களை சொர்கத்திற்கு அனுப்புவது இந்தியாவின் வேலை என்றும் அவர் எச்சரித்துள்ளார்.  சந்திராயன் 2  மற்றும் பல்வேறு திட்டங்களின் மூலம் உலகின் தலைவராக மாற இந்தியா கடுமையா உழைத்து வருகிறது நாம் தோளோடு தோள் கொடுத்தால் நிச்சயம் வெற்றிபெற முடியும் என்று அப்போது அவர் கூறினார்.