தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓவிய ஆசிரியர் ஒருவர் சிறிய அளவில் கோவில் கட்டி அசத்தியுள்ளார். பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டியும், அதற்காக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஓவிய ஆசிரியர் ஒருவர் சிறிய அளவில் கோவில் கட்டி அசத்தியுள்ளார்.பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டியும், அதற்காக தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கல்லக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மணலூர்பேட்டை சேர்ந்தவர் ஓவிய ஆசிரியர் செல்வம். திருக்கோவிலூர் அடுத்த சிவனார் தாங்கள் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 7700 மாத சம்பளத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இது வரையில் அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அவர்களது கோரிக்கை இதுவரையிலும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் முடிவு செய்த ஆசிரியர் செல்வம், துணி சோப்பு மற்றும் குளியல் சோப்புகளை பயன்படுத்தி பிளேடு மற்றும் சிறிய கத்தியால் சோப்புகளை செதுக்கி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறிய அளவிலான கோயிலை வடிவமைத்துள்ளார்.
வெறும் 2 நாட்களில் அவர் இந்த கோயிலை செய்துள்ளார். தற்போது அதற்கான படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து தெரிவித்த ஆசிரியர் செல்வம், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தெய்வமாக நினைத்து இந்த கோயிலை கட்டினேன். பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். நடிகைகளுக்கு கோயில் கட்டும் நம்மூரில் வாழும் முதல்வருக்கு கோவில் கட்டி உள்ளது அனைத்து தரப்பின் கவனத்தை பெற்றுள்ளது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 8, 2021, 12:27 PM IST