ஆழ்துளையில் சிக்கியுள்ள குழந்தை சுஜத் குறித்து அமைச்சரிடம் விசாரித்ததுடன், தெலங்கானாவில் உள்ள மீட்புப் படைகளை அனுப்பி வைப்பதாக கூறி தனது தாய்பாசத்தையும்,  தமிழகத்தின் மீதான தன் அன்பையும்  வெளிபடுத்தியுள்ளார் ஆளுனர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவரின் பாசம் , மிகுந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேதகு டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள்  குழந்தை சுஜித் மீட்பு பணிகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் பாஸ்கர் அவர்களிடம் தொலைபேசியில் தற்போது கேட்டறிந்தார். ஹைதராபாத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை குழுவிடம் ஆலோசனை செய்து குழந்தையை மீட்க  நாம் உதவி செய்வதற்கான வாய்ப்புகள் என்ன இருக்கின்றன என்று ஆலோசனை செய்து உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து  எட்டுக் கோடி மதிப்புள்ள அதிநவீன இயந்திரம் வர இருப்பதாகவும் அந்த இயந்திரத்தின் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் தற்போது குழந்தையை மீட்க போடப்பட்டுள்ள துளைக்கு இணையாக  பக்கத்திலேயே மீண்டும் ஒரு துளையிட்டு  குழந்தையை மீட்க முடியும் என்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

குழந்தையை உயிருடன் ஆரோக்கியமாக மீட்கப்பட இறைவனை வேண்டுவோம். என்று அவர் கூறியதுடன் எந்த உதவி வேண்டுமானாலும் உடனே செய்ய தயாராக இருப்பதாக அவர் தெரிவத்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .