* நான் சினிமா தொழிலில் இருக்கிறேன்! பேனர் வைக்கக்கூடாது என்று சொல்லமாட்டேன். சட்டப்படி அனுமதி பெற்று பேனர் வைக்க வேண்டும்!
- கமல்ஹாசன் (நடிகர், அரசியல் தலைவர்)

* நாங்குநேரி அ.தி.மு.க. வேட்பாளர் ஒரு சாதாரண தொண்டர். அவர் பணத்தை நம்பி தேர்தலில் நிற்கவில்லை. மக்களை நம்பித்தான் நிற்கிறார். 
- ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை அமைச்சர்)

* நெல்லை மாவட்டத்தில் 185 இடங்களில் ஏரி, குளங்கள் தூர்வாரப்படுகின்றன. இதற்காக, நாற்பத்தைந்து கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. நாங்குநேரி தொகுதியின், முந்தைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார், தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. எனவே எங்கள் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களியுங்கள். -ஆர்.பி.உதயகுமார் (வருவாய்த்துறை அமைச்சர்)

* தெலுங்கானா மாநில கலாசாரமும், தமிழக கலாசாரமும் ஏறக்குறைய ஒரே மாதிரியே இருக்கிறது. எனக்கு இந்த மாநிலத்தின் பதுகம்மா பண்டிகை ரொம்ப  பிடித்துள்ளது. அலய் பலஸ் நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. - தமிழிசை செளந்தர்ராஜன் (தெலங்கானா கவர்னர்)

* மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பின், வருமான வரித்துறை அதிகாரிகள் காங்கிரஸாரை மட்டுமே குறிவைத்து வருமானவரி சோதனை உள்ளிட்ட சோதனைகளை நடத்தி வருகின்றனர். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. இதன் மூலம் காங்கிரஸை அழித்துவிட முடியாது. -மல்லிகார்ஜுன கார்கே (மாஜி மத்தியமைச்சர்)

* கும்பல் படுகொலைகள், வெளிநாட்டிலிருந்து வந்த கொடூரம்! என ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார். அது தவறு. அந்த அமைப்பு, மகாத்மா காந்தியின் கொள்கைகளை பின் பற்றினால் நாட்டில் எந்த பிரச்னையும் எழாது. -திக்விஜய் சிங் (காங்கிரஸ் மூத்த நிர்வாகி)

* எங்கள் ஜாதியினரை தேவேந்திர குல வேளாளர்! என குறிப்பிட்டு அரசாணை வெளியிட வேண்டும்! என அ.தி.மு.க.வை வலியுறுத்தி வந்தோம். அதை செய்யாததால் இந்த அரசுக்கு ஆதரவு அளிக்க இயலாது. இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளிலும் நாங்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தரமாட்டோம். 
-டாக்டர்.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம் கட்சி தலைவர்)

* ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் கை வைக்க இதுவரையில் எந்த அரசுக்கும் துணிச்சல் இல்லை. மோடியின் அதிரடியான முடிவால், ஜம்மு - காஷ்மீர், நம் நாட்டின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. காங்கிரஸ் - தேசியவாத கட்சிகள் தங்கள் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை செலுத்துகின்றன. பா.ஜ., சிவசேனா கட்சிக்கு நாட்டு நலனில் அக்கறை உள்ளது. -    அமித்ஷா (உள்துறை அமைச்சர்)

* கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். - நரேந்திர மோடி (பாரத பிரதமர்)

* சீன அதிபருக்கு நம் பிரதமர் கொடுத்த விருந்தில், ஜின்பிங்கிற்கு விருப்பமான சோயா உணவு, மெல்லிய நூடுல்ஸ், பின் தென்னிந்திய உணவு வகைகளான, அரிசி சாதம், அரைத்துவிட்ட சாம்பார், தக்காளி ரசம், கடலை குருமா, இட்லி, தோசை, சனி, சாம்பார், கவுனி அரிசி அல்வா, ரொட்டி, டால் மக்னி, டால் பிரை மற்றும் பழ வகைகள் சாலட், சோயா மசாலா, சிக்கன் டிக்கா, உடன் ஆறு வகையான சூப் என 28 வகையான உணவுகள் இடம்பெற்றன.