ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிந்தபிறகு தெலுங்கானா மாநிலத்தில் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியைப் பிடித்த தெலுங்கான ராஷ்ய சமிதி கட்சி. 25 வருடங்களாக தெலுங்கான தனி மாநிலக் கோரிக்கையை வலியுறுத்தி போராடிய சந்திர சேகர ராவ், மிகப்பெரிய தலைவர்களான சந்திரபாபு நாயுடு, மறைந்த  முன்னாள் முதல்வர் ராஜ சேகர ரெட்டியின் YSR காங்கிரசை மண்ணைக் கவ்வ வைத்தார். 

ஆட்சிக் கட்டிலில் ஏறிய சந்திர சேகர ராவ் மகன் KT தாரக ராம ராவையும் மைத்துனர் ஹரிஷ்ஷை மற்றொரு துறைக்கு அமைச்சராக்கினார் . மகள் கவிதாவை எம்பியாக்கினார்.

 

இப்படி நான்கரை ஆண்டுகளாக ஏக போகமாக வாழ்ந்த சந்திர சேகரராவ் தாமாக முன் வந்து தனது தலைமையிலான தெலுங்கானா அரசை கலைக்க முன் வந்துள்ளார். 2019 நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இரு தேர்தலையும் நடத்த சந்தர சேகர ராவ் அரசு முடிவு செய்துள்ளது.

 

சந்திர சேகர ராவின் இந்த அதிரடி முடிவால் தெலுங்கானா மற்றும் ஆந்திரா மாநிலத்தில் பெரும் பரபரப்பு நிலவுயுள்ளது. ஆட்சிக் கலைப்பு மற்றும் ராஜினமா கடிதத்தை ஆளுநர் நரசிம்மனை சந்தித்து அளித்தார்.