குடியரசு தினவிழா.. தேசியக்கொடி ஏற்றிய ஆளுநர் தமிழிசை.. புறக்கணித்த முதல்வர் சந்திரசேகர ராவ்..!
பிரதமர் மோடி செல்லும் போதெல்லாம் அவரை வரவேற்காமல் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஓராண்டாக மத்திய பாஜக அரசுடன் மோதல் போக்கு ஏற்பட்டு சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநில ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் புறக்கணித்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
74-வது குடியரசு தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கின்றன. மாநிலங்களில் குடியரசு தின விழாவில் ஆளுநர்களும், சுதந்திர தின விழாவில் முதல்வரும் கொடியேற்றுவது வழக்கம். இந்நிலையில் தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஆனால், இந்த விழாவில் பங்கேற்காமல் முதலமைச்சர் சந்திசேகர ராவ் புறக்கணித்தார். இது பெரும் பேசும் பொருளாக உருவாகியுள்ளது. முதல்வரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.