Asianet News TamilAsianet News Tamil

ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்கவே முடியாது..! பொட்டில் ஓங்கி அடித்த தமிழக அரசு... கலக்கும் எடப்பாடி..!

அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் அவர்களது கோரிக்கைகளை ஏற்கவே முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக செய்தித் தாளில் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது.  

Teachers can not accept demands ..! End of Tamil Nadu
Author
Tamil Nadu, First Published Jan 27, 2019, 11:30 AM IST

அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில் அவர்களது கோரிக்கைகளை ஏற்கவே முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக செய்தித் தாளில் அறிக்கை வெளியிட்டு உறுதிப்படுத்தி இருக்கிறது.  

இதுதொடர்பாக தமிழக அரசின் மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்த்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள இந்த  ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பின் கீழ் செயல்படும் பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றன. இந்த சங்கங்கள் வலியுறுத்தும் கோரிக்கைகள் எல்லாம் அரசால் பரிசீலிக்கப்பட்டு செயல் படுத்த இயலாதவை என பலமுறை எடுத்துக் கூறப்பட்டது. எனினும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடங்கி, சில தவறான வழிமுறை களை கடைபிடிப்பது வேதனை தருகிறது. இவர்களின் சில கோரிக்கைகளை நிறை வேற்ற இயலாமைக்கான காரணங்களை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.Teachers can not accept demands ..! End of Tamil Nadu

ஆண்டுதோறும் உயரும் ஓய்வூதிய நிதிச் சுமையால் நிர்வாக செலவை ஈடுகட்ட முடியாமல் அரசு திவாலாகும் நிலை உருவாகும் என்பதால் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் உலகம் முழுவதும் 174 நாடுகளில் கொண்டு வரப்பட்டது. நம்நாட்டில் மேற்கு வங்கம் தவிர மற்ற மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் 2003-ல் இதற்கான சட்டம் இயற்றப்பட்டு அரசு சார்பில் 10 சதவீதமும் ஊழியர் சார்பில் 10 சதவீதமும் பிடித்தம் செய்து இருப்பு வைக்கப்பட்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த சாத்தியக்கூறு உள்ளதா என ஆராய குழு அமைப்போம் என்றுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என அவர் கூறவில்லை.

அதன்படி, அமைத்த குழுவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தினால் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி இல்லாமல் போகும். அரசு வசூலிக்கும் வரியுடன் கடன் பெற்றுதான் சம்பளம், ஓய்வூதியம் தரவேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்துள்ளது. எனவே, அரசின் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி இந்த கோரிக்கையை ஏற்க இயலாது.

Teachers can not accept demands ..! End of Tamil Nadu

7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு வழங்கியதால் வருவாய் பற்றாக்குறை 2017-18ல் ரூ.21,594 கோடியாக உயர்ந்துவிட்டது. இந்த ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ.24 ஆயிரம் கோடியாக உயரும். இதையும் அரசு கடன் பெற்றுதான் செலவு செய்கிறது. இந்நிலையில் ஊதிய நிலுவை வழங்க ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இதையும் அரசு கடன் பெற்றுதான் வழங்க முடியும். இதை சமாளிக்க மக்கள் மீது கூடுதல் வரியை திணிக்க வேண்டிய நிலை ஏற்படும். நிதிப் பற்றாக்குறை உயர்வதை தவிர்க்கவும் முந்தைய ஊதியக்குழு வழிமுறையை பின்பற்றி சம்பள உயர்வு, பணப்பயன் வழங்கப்பட்டது. இப்போதைய நிதிநிலையில் ஊதிய நிலுவை கோரிக்கையை ஏற்க இயலாது என்பதை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Teachers can not accept demands ..! End of Tamil Nadu

மத்திய அரசில் இடைநிலை ஆசிரியர் கள் எண்ணிக்கை மிக குறைவு. ஆனால், மாநில அரசில் இவர்கள் எண்ணிக்கை மிக அதிகம். மேலும், இதே கல்வித் தகுதியில் இதர துறைகளிலும் ஊழியர்கள் பணிபுரிவ தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட் டும் ஊதிய உயர்வு தர இயலாது. மேலும், ஊதியம் உயர்த்தினால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுவதுடன், ஊழியர்கள் இடையேயான ஒப்பீட்டு சமநிலையை வெகுவாக பாதிக்கும். எனினும், இடை நிலை ஆசிரியருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சிறப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால்தான் இந்த கோரிக்கையையும் ஏற்க இயலாது என பலமுறை கூறியும் அரசை நிர்ப்பந்திக்கும் உள்நோக்குடன் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

Teachers can not accept demands ..! End of Tamil Nadu

இதேபோல் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போரா டும் அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனங்களைவிட அதிக சம்பளம் பெறுகின்றனர். மொத்தம் ரூ.47,851 கோடி பொதுக்கடன் பெற்றுதான் அரசு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சங்கடங்களை எல்லாம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் நன்கு அறிவார்கள். ஆனால், சிலர் சங்கம் நடத்துவதற்கும் தங்கள் பிரச்சினைகளை அரசியல் செய்வதற்கும் ஊழியர்களை தூண்டிவிட்டு தவறான பாதையில் வழிநடத்துகின்றனர்.

இதுதவிர 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுவதாக தவறான கருத்து களை பரப்புகின்றனர். எண்ணற்ற படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வளர்ச்சி பணிகளை அரசு தான் செய்ய வேண்டும். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இப்போதைய நிதி நிலையை கருதி, துாண்டி விடும் சங்கங்களின் சதியில் விழாமல் போராட்டங் களை கைவிட்டு உடனே பணிக்கு திரும்ப வேண்டும். மாறாக தொடர்ந்து பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர் கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Teachers can not accept demands ..! End of Tamil Nadu

புள்ளி விவரத்தோடு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு பேரிடியாய் அமைந்து விட்டது. முன்பிருந்த அரசுகள் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் ஒன்று நடவடிக்கை எடுக்கும். அல்லது பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. அல்லது பேச்சு வார்த்தை நடத்திகிறோம் என்கிற பெயரில் வழவழ என ஜவ்வாய் இழுத்து வந்து பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தவறி உள்ளன. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு ஸ்கெட்ச் போட்டு தங்களது நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. அரசின் சூழலை வெளிப்படுத்தி போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசிடம் இல்லாத பணத்தை எப்படி போராட்டக்காரர்களுக்கு தர முடியும் என தெளிவுபடுத்தி உள்ளது. போராட்டக்காரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றாலும் அரசு இந்த அறிவிப்பை முன் வைத்து தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் நிலை உருவாகி இருக்கிறது. ஆகவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் பலனை தரப்போவதில்லை என்பது திட்டவட்டமாகி இருக்கிறது.   

Follow Us:
Download App:
  • android
  • ios