மாணவர்கள்- பெற்றோர்களின் அச்சத்தைப் போக்க10, ஆம் வகுப்புப்பொதுத் தேர்வினை ரத்துசெய்து அனைவருக்கும் தேர்ச்சியளிக்க ஆவனசெய்ய வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம்,  கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களை காப்பாற்ற தீவிரநடவடிக்கைகள் எடுத்துவரும் தமிழ்நாடு அரசை பாராட்டி மகிழ்கிறோம்.  21 நாள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அவசியமான ஒன்றாக உள்ளது. மூன்றாம் உலகப்போர் கத்தியின்றி ரத்தமின்றி யுத்த மொன்றினை கொரோனா வைரஸ் தொடுத்துள்ளது.  இந்நிலையில் நாளுக்குநாள் கொரோனா வைரஸ் விஸ்வரூப மெடுத்துவருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  நமக்கு நாமே தனிமைப்படுத்தத் தவறிவிட்டால் சமூகப்பரவலைத் தடுக்கமுடியாது. பேரிடர் காலக்கட்டத்தில் மக்களைக் காப்பாற்றுவதே முதன்மையான தாகும் எனவே உயிரா படிப்பா என்றால் உயிரே முக்கியம், 

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். ஆகையால்  10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கவே இல்லை. 11 ம் வகுப்பிற்கு கடைசித் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு கடைசித்தேர்வில் 34 ஆயிரம்  மாணவர்கள் எழுதவில்லை. தேர்வுஎழுதாதவர்களுக்கு மறுதேதி அறிவிக்ப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கொரோனாவும் மின்னல் வேகத்தில் பரவி உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு உலகையே உறையவைத்துக்கொண்டிருக்கிறது.  தமிழ்தாட்டில் கடந்த ஏழு நாட்களில் கொரோனா பாதிப்பால் 690 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வீட்டிலேயே முடங்கியுள்ள நிலையில் உடலும் மனசும் ஒருநிலையில் இல்லை. மாண்புமிகு பிரதமர் அவர்களும் உயிர் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் எதிர்கால மாணவர்களின் நிலைக்குறித்து பெற்றோர்கள் பெரும் அச்சத்திலும் மன உளைச்சலிலும் உள்ளார்கள்.  மேலும் ஊரடங்கு முடிந்தவுடன் 15 ந்தேதி 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது இயலாத நிலை.

 

அரசுப்பள்ளி மாணவர்களின் குடும்பங்கள் பெரும்பாலும் 10 க்கு 10 என்ற அளவில் உள்ள வீடுகளில் வசித்துவருகிறார்கள். படிப்பதற்கு போதிய வசதியின்றி தவிப்பதும் வெளியே வராத சூழலில் தேர்வு நடந்தால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.  எனவே 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வினை ரத்துசெய்து அனைவரும்க்கும் தேர்ச்சி அறிவித்திட வேண்டும்.11 ஆம் வகுப்பிற்கு பள்ளி அளவில் தேர்ச்சியளித்திடவும்  ஆவனசெய்ய  வேண்டுகிறோம்.

மேலும் கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தபிறகு மாணவர்கள் தங்களின்  மேற்படிப்பில் பாடப்பிரிவினை தேர்வு செய்வதற்கு ஏதுவாக அரசே ஒரு சிறப்புத்தேர்வு வைத்து தேர்வு செய்து 11 ஆம் வகுப்பில்  இடமளிக்கலாம் மேலும் பெற்றோர்கள் மாணவர்கள் பாதுகாப்பினை உறுதிசெய்யும் வகையில்  மாண்புமிகு முதலமைச்சர் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து அனைவரும் தேர்ச்சி அறிவிக்க ஆவனசெய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகிறோம்.