முஸ்லீம் கடையில் டீ குடிக்காதீங்க.. ஆண்மைக்குறைவு ஏற்படும் - சர்ச்சையை கிளப்பிய எம்.எல்.ஏ !!
முஸ்லிம் நடத்தும் உணவகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முஸ்லிம்கள் உணவின் மீது எச்சில் துப்பிய பிறகே பரிமாறுகின்றனர். அவர்களின் எச்சிலை நாம் ஏன் சாப்பிட வேண்டும் ? என்று கேரளாவின் மூத்த அரசியல்வாதியான பி.சி.ஜார்ஜ் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது.
கேரளாவின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.சி. ஜார்ஜ் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘முஸ்லிம்கள் நடத்தும் உணவகங்களில் விற்கப்படும் டீயில் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும் சொட்டு மருந்து கலந்துள்ளது. நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றும் நம்பிக்கையில் ஆண்களையும், பெண்களையும் மலட்டுதன்மையற்றவர்களாக மாற்றுவதற்காக இது செய்யப்பட்டது.மாநிலத்தில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள், முஸ்லிம் நடத்தும் உணவகங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
முஸ்லிம்கள் உணவின் மீது எச்சில் துப்பிய பிறகே பரிமாறுகின்றனர். அவர்களின் எச்சிலை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? அவர்கள் துப்புவது ஒரு வாசனை என்று அவர்களின் அறிஞர்கள் கூறுகின்றனர். அவர்கள் தங்கள் பணத்தை பாக்கெட் செய்வதற்காகவே முஸ்லிம் அல்லாத பகுதியிகளில் வணிகத்தை தொடங்கினர்’ என்று கூறினார். பி.சி ஜார்ஜின் குற்றச்சாட்டுக்கு பல்வேறு கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பி.சி. ஜார்ஜ் தனது அறிக்கையை திரும்ப பெற வேண்டும், அந்த சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியோ, பி.சி. ஜார்ஜ் மீது கேரள அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. பி.சி. ஜார்ஜின் கருத்து கேரள அரசியலில் பெரும் விவாத பொருளாகி உள்ளது. அவருக்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் சார்பில் காவல் துறை, முதல்வர் பினராயி விஜயனிடம் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. மத கலவரத்தை தூண்டும்பி.சி.ஜார்ஜை கைது செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி சனிக்கிழமை விடுமுறை கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு!