tea and buiscut expenses for uttrakant is 68 lakhs

உத்தராகாண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பாஜகவைச் சேர்ந்த திரிவேந்திர சிங், தான் பதவியேற்ற ஒன்பது மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகையறாக்களுக்கு மட்டும் 68 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வருபவர் பாஜகவைச் சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத். இவர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அம்மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்..



இந்நிலையில் ஹேமந்த் சிங் குனியா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முதலமைச்சர் அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் பதவியேற்றது முதல் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளுக்கு எவ்வளவு பணம் செலவிட்டுள்ளது என கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் திரிவேந்திர சிங் அரசு, கடந்த 9 மாதத்தில் மட்டும் டீ மற்றும் ஸ்நாக்சுக்கு என மொத்தம் 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என பதில் தெரிவித்துள்ளது.



இதேபோல், இதற்கு முன்பு முதலமைச்சராக இருந்த ஹரீஷ் ராவத், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தனது முதலமைச்சர் அலுவலகத்தில் டீ மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளுக்கு என 1 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக தெரிய வந்துள்ளது/