ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி அம்மாநில எம்.பி. நரமள்ளி சிவபிரசாத், எம்.ஜி.ஆர் வேடத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் சாட்டையை சுழற்றி போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத காரணத்தால், தெலுங்கு தேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகியது. அதே நேரம், அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்தனர்.

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது, அரசிற்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி எடுத்தது. இந்த நிலையில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்  போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற வளாகத்தில் தினம் ஒரு வேடம் அணிந்து போராட்டம் நடந்து வருகிறது.

தெலுங்கு தேசம் சித்தூர் எம்.பி.க்களில் ஒருவரான நரமல்லி சிவபிரசாத் முன்பு மாயவித்தைகாரன் வேடம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அடுத்த போராட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வேடமிட்டார். கருணாநிதியைப்போல வேடமிட்டது மட்டுமல்லாது வீல் சக்கரம் பொறுத்திய இருக்கையில் அவர் அமர்ந்து போரட்டத்தில் ஈடுபட்டதுதான் ஹைலைட்! இன்று நடந்த போராட்டத்தில் எம்.ஜி.ஆர் வேடமிட்டு சாட்டையௌஇ சுழற்றியபடி போராட்டத்தில் ஈடுபட்டார்.