Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக்கில் ரூ.2000 நோட்டுகள் செல்லுமா? செல்லாதா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..!

டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது.

Tasmac Rs.2000 ban..? Minister Senthil Balaji Explanation
Author
First Published May 20, 2023, 12:05 PM IST

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை. தகவல் முற்றிலும் தவறானது என அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார். 

நாடு முழுவதும் புழக்கத்திலிருக்கும் 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்ப பெறப்படும் என ரிசர்வ் வங்கி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது. மே 23-ம் தேதி முதல் வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் மட்டுமே வங்கிகளில் கொடுத்து மாற்ற முடியும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்தது. 

இதையும் படிங்க;- 500 சந்தேகங்கள்! 1000 மர்மங்கள்! 2000 பிழைகள்! இதை மறைக்கவே இந்த நடவடிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்.!

Tasmac Rs.2000 ban..? Minister Senthil Balaji Explanation

இதனையடுத்து, டாஸ்மாக் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. அதையும் மீறி ரூ.2000 நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு. மாவட்ட நிர்வாகத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- ரூ.2000 நோட்டுகளை வாங்காதீங்க! வாங்கினால் இதுதான் கதி! டாஸ்மாக் நிர்வாகம் போட்ட அதிரடி உத்தரவு..!

Tasmac Rs.2000 ban..? Minister Senthil Balaji Explanation

இதுதொடர்பாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை; தகவல் முற்றிலும் தவறானது என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios