Asianet News TamilAsianet News Tamil

கொடூரமாக கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியர் குடும்பத்துக்கு இரங்கல்.. அரசு வேலை, 10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர்

உயிரிழந்த விற்பனையாளர் துளசிதாஸ் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு காரணமான நபர்களைத் துரிதமாகச் செயல்பட்டு கண்டுபிடிக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

TASMAC employee murder...CM Stalin announced 10 lakh fund
Author
Tamil Nadu, First Published Oct 15, 2021, 9:48 AM IST

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொல்லப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராக துளசிதாஸ் என்பவரும், உதவியாளராக ராமு என்பவரும் பணிபுரிந்து வந்தனர். கடந்த 4ம் தேதி இரவு 10 மணியளவில் கடையை மூடி விட்டு வீட்டுக்குக் கிளம்ப தயாராகிக்கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் துளசிதாஸையும், ராமுவையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

TASMAC employee murder...CM Stalin announced 10 lakh fund

படுகாயமடைந்த ராமு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்துக்கு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம்  தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், , இச்சம்பவத்துக்கு காரணமான நபர்களைத் துரிதமாகச் செயல்பட்டு கண்டுபிடிக்கவும் காவல் துறையினருக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க;- திமுக அமைச்சருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.!

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- உயிரிழந்த விற்பனையாளர் துளசிதாஸ் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்துக்கு காரணமான நபர்களைத் துரிதமாகச் செயல்பட்டு கண்டுபிடிக்கவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.இதுபோன்ற தாக்குதல் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். 

TASMAC employee murder...CM Stalin announced 10 lakh fund

இதையும் படிங்க;- இபிஎஸ் வெளியே சென்றால் தான் கட்சி உருப்படும்.. ஓபிஎஸ் தலைமையேற்க வேண்டும்.. அதிமுக முன்னாள் நிர்வாகி அதிரடி.!

மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த விற்பனையாளர் துளசிதாஸ் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கிடவும், அவருடைய குடும்பத்தின் ஏழ்மை நிலையைக் கருத்தில்கொண்டு துளசிதாஸின் மனைவி சுமதிக்கு அவரின் கல்வித் தகுதிக்கேற்ப கருணை அடிப்படையில் உரிய பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராமுவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios