கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதிமீறல்களுக்கும் எல்லாவித பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திதரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது.

கட்டுப்படுத்த முடியாமல் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்று, இரவு பகல் பாராது களப்பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை அதிகப்படுத்தியுள்ளது என்பதையே இந்நிகழ்வு குறித்த வாணியம்பாடி ஆணையரின் வருத்தம் வெளிப்படுத்துகிறது. 

எனவே, கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்புப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் அரசு அதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி கடைகள் இயங்குவதை உறுதிசெய்ய‌ வேண்டும் எனவும் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்’’எனத் தெரிவித்துள்ளார்.