தமிழகத்திலும் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் இந்த நிதியாண்டில் 5 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாநில அரசின் வருமானத்தில் 60 சதவீதம் வரை மதுக்கடைகள் மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை மூலமாகவே கிடைக்கிறது. தமிழகத்தில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. இதனால் அரசுக்கு ரூ. 3,700 கோடி வருமானம் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மதுக்கடைகளை பல மாநிலங்கள் திறந்து வருகின்றன.

 அதேபோல் தமிழகத்திலும் இன்று முதல் மதுக்கடைகள் செயல்பட தொடங்கியுள்ளன. மூடப்பட்ட காலத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட டெல்லி, ஆந்திரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மதுபான பொருட்கள் விலையை உயர்த்தியுள்ளன. அதேபோல் தமிழகத்திலும் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்த நிதியாண்டில் 5 ஆயிரத்து 500 கோடி வருமானம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மது விற்பனை மூலம் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து வந்தது. இந்த ஆண்டு ரூ. 33 ஆயிரம் கோடி வரை வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.