மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களவை தேர்தலில் திருச்சி தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்பிய நிலையில் அவரை தேர்தல் நிறுத்தாமல் மாநிலங்களவை மூலம் எம்.பி ஆக்க மு.க.ஸ்டாலின் முயன்றதன் பின்னணி தற்போது வெளியாகி இருக்கிறது. 

மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்த வைகோ மூன்று தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை வைத்து வந்தார். ஆனால், வி.சி.க, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா இரு தொகுதிகளை ஒதுக்கினார் மு.க.ஸ்டாலின். ஆனால், வைகோவின் மதிமுக கட்சிக்கு ஈரோடு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டது. திருச்சியை ஆவலாய் கேட்டு வந்த வைகோவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்த நிலையில், வைகோவிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “நீங்கள் எந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் உங்களைத் தோற்கடிக்க ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் நூறு கோடி ரூபாயைச் செலவழிக்கத் தயாக இருக்கின்றனர். ஏற்கெனவே பல தேர்தல்களில் அவர்களால்தான் தோற்கடிக்கப்பட்டீர்கள். 

ஆகையால் தேவையில்லாத பலப்பரீட்சை எடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக ராஜ்ய சபா மூலம்  சென்றுவிடுங்கள். தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி வெற்றிக்காக பிரசாரம் செய்யுங்கள்” எனக் கூறியுள்ளார். அதன்பிறகே வைகோ, ஸ்டாலின் கூறியதன் பின்னணியை ஆராய்ந்து அந்த முடிவை ஏற்றுக் கொண்டாதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.