tamimun ansari speech about rajini interview
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தூத்துக்குடி செல்கிறேன். நடிகர் என்பதால் என்னை பார்த்தால் இந்த சூழலில் தூத்துக்குடி மக்கள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வருவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
காயமடைந்தவர்களில் மூன்று பேருக்கு தலா ரூ.10000 நிதி உதவி அளிக்கியுள்ளார். இறந்தவர்களின் வீடுகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தான் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வரவழைத்து அவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்
காயமுற்றவர்களை சந்தித்த பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் தமிழக புலனாய்வு துறை தவறால்தான் வன்முறை நிகழ்ந்துள்ளது. தமிழகம் போராட்ட பூமியாக மாறக்கூடாது. போராட்ட களமாக தமிழகம் இருந்தால் முதலீட்டாளர்கள் தொழில் பாதிக்கப்படுமென கருதி தமிழகம் வரமாட்டார்கள் எனக் கூறினார். பிரச்சனைக்கு தீர்வுகாண போராட்டம் மட்டும் வழிகிடையாது எனக்கூறியுள்ளார். விஷமிகள் புகுந்து நாசக்கார வேலைகளை செய்துள்ளனர் என்று அரசின் துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தும் விதமாக கூறினார் ரஜினிகாந்த்

ஸ்டெர்லைட் மக்கள் போராட்டத்தில் எந்த கட்சி தலைவர்களும் கட்சியின் பெயர் சொல்லி கலந்து கொள்ளக்கூடாது என்றும் கட்சிகளுக்கு இடமில்லை என்று தெரிவித்த வெளிப்படையான ஒரு மக்கள் போராட்டமாகத்தான் ஸ்டெர்லைட் போராட்டம் நடைபெற்று வந்தது.
இப்படியாக அறவழியில் நடந்த போராட்டத்தை ரஜினி கொச்சைப்படுத்தியுள்ளார் என மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார். ரஜினி மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.
