அண்மையில் நடைபெற்ற மக்கவைத் தேர்தலில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்த எம்.பி.க்கள் பதவி ஏற்றுக் கொண்டபோது தமிழ் வாழ்க என  முழக்கமிட்டபடி பதவி ஏற்றுக் கொண்டனர்.  தமிழக எம்.பி.க்களின் அந்த வார்த்தைகள் நாடாளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் தான் மத்தியில் பாஜக அரசு அமைந்துவிட்டதால் தமிகத்தில் இத்தனை எம்.பி.க்கள் இருந்தும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என அதிமுக உள்ளிட்ட சில கட்சிகள் ஏளனம் செய்து வந்தன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி முதலாமாண்டு நினைவு தின கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக எம்.பி.க்களால் ஒன்றும் செய்ய முடியாது என பலர் கிண்டல் செய்தனர். ஆனால் தமிழக எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்றத்தையே கிடுகிடுக்க வைத்து வருகின்றனர் என பேசினார்.

இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ள தமிழ பாஜக தலைவர் தமிழிசை, நாடாளுமனறத்தில் தமிழ் வாழ்க என் கோஷமிட்ட திமுக தமிழ் பற்றாளர்கள் ஏன் ஆங்கிலத்தில் கையெழுத்துப் போடுகின்றனர் என கிண்டல் செய்துள்ளார்.

நம்ம ஊரு தங்கிலீஷ் பாஷையில் பேசிய இவர்கள் நாடாளுமன்றத்தையே கிடுகிடுக்க வைத்தார்களாம். மிஸ்டர் ஸ்டாலின் இந்த வீண் ஜம்பம் எல்ம் வேண்டாம் என சரமாரியாக தாக்கியுள்ளார்.