இந்தியா பொருளாதார சுதந்திரம் அடைந்துள்ளதாகவும், உலக நாடுகள் அனைத்துக்கும் இந்தியா வழிகாட்டியாக திகழ்வதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.

71-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர், பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பேசும்போது, நீட் தேர்வு தொடர்பான அவசர சட்டம் கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகவே கொண்டு வரப்பட்டது என்றார்.

நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கிடையாது என்று கூறிய அவர், எதிர்கால மாணவர்களுக்கு நீட் தேர்வு மட்டு சிறந்த பரிசாக அமையும் என்று கூறினார்.

பொருளாதார சுதந்திரத்தை இந்தியா அடைந்துள்ளதாகவும், உலக நாடுகள் அனைத்துக்கும் இந்தியா வழிகாட்டியாக உள்ளதாகவும் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.