தமிழகத்தின் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை கேரள மாநிலத்துக்கும் போட்டு மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் போட்ட டுவிட்டர் செய்தியால், பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால், நெட்டிசன்கள் அவரை வறுத்து எடுத்துவிட்டனர்.
பெயர்வலிமை
பெயருக்கென்று ஒரு வலிமை இருக்கிறது. அதை மாற்றிக்கூறும் போது, அந்த பெயரை கொண்டவர்களுக்கு பெரிய மனவலி ஏற்படும் என்பது எல்லோரும் உணர்ந்ததே. அதைத்தான் மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் செய்துள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரின் அமைச்சர்கள், அதிகாரிகள்,மத்தியஅமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று சந்தித்து பேசினார்கள். அப்போது மாநிலத்தின் நலன்கள், உதவிகள் உள்ளிட்ட விசயங்கள்குறித்துபேசிவிட்டு சென்றனர்.
மாற்றிவிட்டார்
கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழுவினர் வந்துவிட்டு சென்றவுடன், டுவிட்டரில் “கேரள முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவரின் அமைச்சர் குழுக்கள், அதிகாரிகள், 12, ஜன்பத், பகுதியில் உள்ள எனது வீட்டில் சந்தித்தனர்'' என்று போட்டுவிட்டார்.
பெரும் குழப்பம்
டுவிட்டரில் பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி, கேரளமாநிலத்துக்கு முதல்வர்பினராயி விஜயன்தான், இங்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பெயரை குறிப்பிட்டுள்ளாரே? வந்து சென்றது தமிழக முதல்வர் பன்னீர் செல்வமா அல்லது கேரள முதல்வரா? என குழம்பிவிட்டனர்.
தவறை உணர்ந்தார்
அதன்பின், தனது தவறை உணர்ந்து, செய்தியை திருத்தி, கேரள முதல்வர் பினராயிவிஜயன் தலைமையில் அவரின் அமைச்சர்கள், அதிகாரிகள் சந்தித்துவிட்டு சென்றனர் என்று மத்தியஅமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பதிவிட்டார்.
வறுத்து எடுப்பு...
இந்த செய்தியைப் பார்த்ததும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நெட்டிசன்கள்ராம்விலாஸ் பாஸ்வானை பொறித்து எடுத்துவிட்டனர்.
‘தென் மாநிலங்களின் முதல்வர் பெயரை மறந்ததுபோல்தான் மாநிலங்களையும் மறந்துவிட்டீர்கள்’, ‘ இந்தியாவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் என்று கூறாதீர்கள்’, ‘கேரளமுதல்வர் பெயர் கூட தெரியாத உங்களிடம் எங்களின் கலாச்சாரம் பன்பாடு எப்படிதெரியும்?’, மோடியின் அரசின் இப்படி ஒரு அமைச்சரா! வெட்கக் கேடு’ என டுவிட்டரில் பாஸ்வானை வறுத்து எடுத்துவிட்டனர்.
