திரிபுரா மாநிலத்தல் ஏற்பட்ட நிலைதான் தமிழத்திலும் ஏற்படும் என்றும், அங்குள்ள திராவிட கட்சிகளை மக்கள் தூக்கி எறிற்து பாஜகவை ஆட்சியில் அமர வைப்பார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. தாமதமாக இருந்தாலும், இப்போது நடைபெறுவது மகிழ்ச்சி தான் என்றும். நிர்வாக சீர்கேடுகள் இருந்தாலும் அவற்றை சீர்செய்ய வேண்டியது இக்கூட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காவிரி பிரச்சினையை வைத்து பிரதமரின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார் என குற்றம்சாட்டிய தமிழிசை,  காவிரி பிரச்சினையில் முதலமைச்சர்  அழைத்தாலும், துணைத்தலைவர் வரவேண்டும் என்பதற்காக ஒரு நாள் தாமதமாக செல்கிறார் என தெரிவித்தார்.

பிரதமர் சந்திக்க மறுக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். உண்மையை திரித்து காவிரியை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார். சித்தராமையா, தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க மறுத்தபோது கண்டித்தீர்களா? உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்தபிறகு கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டுகிறீர்கள்? எனவும் தமிழிசை கேள்வி எழுப்பினார்.இலங்கை பிரச்சினையில் திமுக நாடகம் நடத்தியது தெரியும். காவிரி பிரச்சினையில் ராஜினாமா செய்ய துணைக்கு ஏன் அ.தி.மு.க. எம்.பி.க்களை அழைக்கிறீர்கள். துணிவு இருந்தால் 4 தி.மு.க. எம்.பி.க்களின் ராஜினாமா கடிதத்தை உடனே தாருங்கள். பிரதமர் செய்ய வேண்டிய நேரத்தில் செய்வார். சந்திக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது எனவும் தமிழிவை கூறினார்..தமிழகத்தை உதாசீனப்படுத்த வேண்டிய சூழ்நிலை பிரதமருக்கு கிடையாது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் அடிப்படை பணிகள் தொடங்குகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

திரிபுராவில் கம்யூனிஸ்டு கட்சி நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் அதே போல தமிழகத்தில் திராவிட கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டு இங்கும் பாஜக ஆட்சி மலரும் எனவும்   தமிழிசை தெரிவித்தார்.