2014 நாடாளுமன்றத்தில் ஆட்சியை பிடித்த பாஜக பல புதிய திட்டங்களை கொண்டு வந்தது.

அதில் நாடு முழுவதும் மின் திட்டத்தை செயல்படுத்தும் உதய் மின் திட்டமும் ஒன்றாகும்.

மாநில மின் பகிர்மான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க உதய் மின் திட்டம் உதவும் என கூறப்பட்டது.

முதலில் எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக் அரசு தற்போது இத்திட்டத்தில் இணைந்துள்ளது.

உதய் மின் திட்டத்தில் இணையும் 21 வது மாநிலம் தமிழகம்.

தலைநகர் டெல்லியில் மத்திய அரசு சார்பாக நடைபெற்ற சிறய நிகழ்ச்சியில் தமிழக் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார்.

மத்திய அரசு சார்பில் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியுஷ் கோயலும் கலந்து கொண்டார்.

மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே உதய் மின் திட்டம் தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தில் அமைச்சர் தங்கமணி கையெழுத்திட்டார்.

இந்த புதிய மின் திட்டத்தில் இணைந்துள்ளதால் தமிழக அரசுக்கு 11,000 கோடி ரூபாய் நிதி கிடைக்கும்.

முதல் ஆண்டின் மின் திட்டத்தின் மின் பகிர்மான நிறுவனத்தின் மொத்த  கடனில் 75% மாநில அரசு ஏற்கும்.

இரண்டாம் ஆண்டு 50 % ஆகவும் அதுவே மூன்றாம் ஆண்டில் 25% ஆக குறைந்து விடும்.

முதல் வருடத்தில் தமிழக அரசுக்கான கடன் தொகையில் 2500 கோடி ரூபாய் கடன் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.