Lockdown :தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் ! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை !
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் பரவல் தற்போது ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க நாட்டில், கொரோனா வைரஸ் தொற்று தனது புதிய அவதாரத்தை எடுத்துள்ளது. இந்த வைரஸ் தொற்றுக்கு ஓமிக்ரான் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் B1.1 529 எனும் புதிய வகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது. ஓமிக்ரான் தொற்று இதுவரை 59 நாடுகளுக்குப் பரவி உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளும் விமான போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
தமிழ்நாட்டில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக சில மாதங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சில கட்டுப்பாடுகள் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. ஓமிக்ரான் பரவுவதை தீவிரமாக தடுக்கும் பொருட்டு அனைத்து மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி இருந்தது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது.தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கிறார்.
இந்தக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தலைமைச் செயலாளர், மருத்துவத் துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும்.