* வைகோவுக்கு எதிராக தி.மு.க. தொடர்ந்திருந்த அவதூறு வழக்குகள் இரண்டும் தள்ளுபடியானதால், அந்த சலசலப்புகளில் இருந்து வைகோ விடுபட்டார்:    செய்தி (இந்த விஷயத்துல தி.மு.க.காரங்க அவசரப பட்டுட்டாய்ங்கன்னு பா.ஜ.க. புலம்புது. ஏன்னா, அடுத்த தேர்தல் வர்றப்ப புயல் எங்கே போயி வேணாலும் மையம் கொள்ளும். அப்ப இந்த வழக்கை யூஸ் பண்ணிக்கலாம், வட போச்சே!)

* பொருளாதார பின்னடைவால், லட்சக்கணக்கானோர் வேலை இழந்திருப்பதாக கூறுவதற்கு எந்த புள்ளிவிபரமும் இல்லை. சிறு, குறு நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாரா தொழில்களில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை:    நிர்மலா சீதாராமன். ( நீங்க ஆவணம் இல்லை, புள்ளிவிபரம் இல்லைன்னு சொல்றீங்க. இதுக்கு பதிலடியா ‘லோக்சபா வழியா வராம, ராஜ்யசபா வழியா அமைச்சரானால் மக்களின் எண்ணிக்கை எப்படி தெரியும்?’ன்னு காங்கிரஸ் கேக்குது மேடம்.)

* எந்த ஒரு விஷயத்திலும் தி.மு.க.வின் நிலைப்பாடு ஸ்டிராங்காக இல்லை:பிரேமலதா (இதுக்கு தி.மு.க. காரங்க என்ன சொல்றாங்க தெரியுமாண்ணி? ‘ஸ்டிராங், தெளிவு, நிதானம்! இதையெல்லாம் பத்தி பேசுறதுக்கு தே.மு.தி.க.வுக்கு எந்த அதிகாரமும், தகுதியும் கிடையாது’ன்னு)

* தமிழக அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று கொண்டே உள்ளனர். தமிழக அமைச்சர்கள், சுற்றுலா அமைச்சர்களாக மாறிவிட்டது: மு.க. ஸ்டாலின். (தல, கோட்டை காலியாதான் இருக்குது. காட்பாடி, விழுப்புரம், திருச்சின்னு உங்காளுங்களை உள்ளே இறக்கிடுங்க. அவங்க வந்து கேக்குறப்ப ‘கொடுக்க முடியாது போ’ன்னு சொல்லிடலாம்.)

* உலக அளவில் பொருளாதார மந்த நிலை இருக்கும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு சென்றது ‘எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போறாங்க’ன்னு சொல்றா மாதிரி இருக்குது: தினகரன். (அண்ணே, ஓட்டு போட ஒருத்தனும் தயாரில்லைன்னு தெரிஞ்ச பிறகும் நீங்க நாற்பது தொகுதியில நின்னீங்க, பிரசாரத்துக்கு வந்தீங்க! யாராச்சும், எதாவது கேட்டாங்களா? விடுங்க பாஸ்)