Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rain updates; அட ஆண்டவா.. இந்த 8 மாவட்டங்களில் வச்சு செய்யப்போகுது.. வானிலை மையம் பயங்கர அலர்ட்..

தெற்கு வங்க கடற்பகுதியில் (5.8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி  நகரக் கூடும். 

Tamilnadu Rain updates; Oh my God .. rain alert for these 8 districts.. Weather Center warning for next 4 days ..
Author
Chennai, First Published Nov 23, 2021, 1:09 PM IST

தெற்கு வங்க கடற்பகுதியில் (5.8 கிலோ மீட்டர் உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் வரும் நாட்களில் தமிழக கரையை நோக்கி  நகரக் கூடும். இதன் காரணமாக 23.11.2021 மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும், காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

மேலும், 24.11.2021: திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய தென் மாவட்டங்களில்  அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,  வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

25.11.2021: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்  பெய்யக்கூடும்.

Tamilnadu Rain updates; Oh my God .. rain alert for these 8 districts.. Weather Center warning for next 4 days ..

26.11.2021, 27.11.2021: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), பந்தலூர் (நீலகிரி) தலா 7, காமாட்சிபுரம் (திண்டுக்கல்), தேவாலா (நீலகிரி), சிவகிரி (தென்காசி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்) தலா 5, டிஜிபி அலுவலகம் (சென்னை), எழிலகம் (சென்னை), கூடலூர் பஜார் (நீலகிரி), அவினாசி (திருப்பூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), ஓமலூர் (சேலம்), பிரையர் எஸ்டேட் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி),  தலா 4, அய்யனாவரம் (சென்னை), தொண்டையார்பேட்டை (சென்னை), திருப்பத்தூர் (சிவகங்கை), துவாக்குடி (திருச்சி), தாத்ஐயங்கார்பேட்டை (திருச்சி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பவானிசாகர் (ஈரோடு), தூத்துக்குடி துறைமுகம்  (தூத்துக்குடி) கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), மூங்கில்துறைப்பட்டு (கள்ளக்குறிச்சி) தலா 3,

Tamilnadu Rain updates; Oh my God .. rain alert for these 8 districts.. Weather Center warning for next 4 days ..

மீனவர்களுக்கான எச்சரிக்கை: வங்க கடல் பகுதிகள் 26.11.2021,27.11.2021: குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள். தமிழக கடலோரப் பகுதிகள், அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios