Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Rain:தமிழக மக்களே உஷார்.. 12 ஆம் தேதி வரை தென் மாவட்டங்களில் அடித்து ஊற்றபோகுதாம்.

வடகிழக்கு பருவ காற்றின் (easterly trough) காரணமாக 08.12.2021:  கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Tamilnadu Rain: People of Tamil Nadu are alert .. it will pour in the southern districts till the 12th.
Author
Chennai, First Published Dec 8, 2021, 6:31 PM IST

வடகிழக்கு பருவ காற்றின் (easterly trough) காரணமாக 08.12.2021:  கடலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், 19.12.2021: அரியலூர், பெரம்பலூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

Tamilnadu Rain: People of Tamil Nadu are alert .. it will pour in the southern districts till the 12th.

10.12.2021,11.12.2021: தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

12.12.2021: தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் அதிகாலை நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

Tamilnadu Rain: People of Tamil Nadu are alert .. it will pour in the southern districts till the 12th.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): வால்பாறை  (கோயம்புத்தூர்), பிலவாக்கல் அணை (விருதுநகர்) தலா 5, சுரளகோடு  (கன்னியாகுமரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி) தலா 3 . தக்கலை (கன்னியாகுமரி) 2, சேரன்மகாதேவி (திருநெல்வேலி), பர்லியார் (நீலகிரி), சோத்துப்பாறை (தேனி), சிற்றாறு (கன்னியாகுமரி), பூதபாண்டி (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), சிவலோகம்  கன்னியாகுமரி), தலா 1. மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை

Follow Us:
Download App:
  • android
  • ios