tamilnadu political current updates

பக்கம் பக்கமாய் கதை பேசுவதை விட ரெண்டு பிட்டு செய்தியில் இருக்கும் மவுசே தனிதான். ஒரு காலத்தில் கேரளாவில் மம்மூட்டி, மோகன்லால் படங்களை விட ஷகிலாவின் ‘பிட்டு படங்களே’ அதிகமாய் ஓடி வசூலை வாரிக் குவித்தன. 
இதன் மூலம் பிட்டுக்கு இருக்கும் வரவேற்பை புரிந்து கொண்டு கீழே இருக்கும் பிட்டுகளை (ஷகிலா டைப் பிட்ஸ் இல்லை பாஸ்) மேயுங்கள் மக்கழே!...

* அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகிய மூன்று எம்.எல்.ஏ.க்களும் ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு தர வேண்டும். அதுவே அம்மாவுக்கு அவர்கள் காட்டும் நன்றிக்கடன்!
- மாஜி அமைச்சர் வைகைச் செல்வன்.

* விஜயகாந்த் ஒரு வெள்ளந்தியான நல்ல மனிதர். ஆனால் தனது உடல் நலத்தை சரியாகப் பேணிப் பாதுகாக்க முடியாததால் நல்ல வாய்ப்புக்களை எல்லாம் நழுவ விட்டு நிற்கிறார்.
- திருமா வளவன். 

* ஆர்.கே.நகரில் பெண்களுக்கு ஸ்கூட்டி தருவதாக கூறி விண்ணப்ப படிவங்களைக் கொடுத்து குறுக்கு வழியில் ஓட்டுப் பிடிக்கிறது அ.தி.மு.க.
- ஸ்டாலின் 

* எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க காரணம் மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆன்மாதான். 
- ஓ.பன்னீர்செல்வம். 

* ஆர்.கே.நகரில் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகம். (அவ்வ்வ்வ்வ்....)
- அமைச்சர் செல்லூர் ராஜூ

* அப்பல்லோவில் ஜெயலலிதா சுயநினைவுடன் இருந்த வீடியோ எங்களிடம் உள்ளது. அவசியம் ஏற்பட்டால் அதை வெளியிடுவோம். 
- வெற்றிவேல் எம்.எல்.ஏ.

* இன்ஸ்பெக்டர் முனிவேலின் துப்பாக்கியில் இருந்து வெளியேறிய தோட்டாவே இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் உயிரை பறித்தது
- பாலி மாவட்ட எஸ்.பி. தீபக் பார்கவ்.

* இந்தியாவில் வசிக்கும் முஸ்லீம்களும் இந்துக்களே. இந்துத்வத்தின் கொள்கையே அரவணைப்பதுதான், எதிர்ப்பது இல்லை
- மோகன் பாகவத்.

* நாடு பல இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது. இப்போது காங்கிரஸ் தலைவராக பதவியேற்றிருக்கும் ராகுல் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். மோடிக்கு மாற்று அவர் மட்டுமே
- திருநாவுக்கரசர்.

* ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறும். அது ஸ்டாலின் விரைவில் முதலமைச்சர் ஆவதற்கான அடித்தளமாக அமையும். 
- வைகோ

* கட்சியில் புது ரத்தம் பாய்ச்சுவேன்! என்று ராகுல் நம்பிக்கை வார்த்தைகளை விதைத்துள்ளார். இதை நான் வரவேற்கிறேன், பெருமிதம் கொள்கிறேன். 
- சோனியாகாந்தி. 

* தமிழகத்தில் நிர்வாகமே நடக்கவில்லை. ஒரு பிரச்னை குறித்து யாரிடம் முறையிடுவது என்றே புரியவில்லை. 
- ஹெச். ராஜா.

* குக்கரைக் காட்டி வாக்கு கேட்க அனுமதிக்கவே கூடாது.
- தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மனு.

* எனது போராட்டத்தால் இனி எந்த கெஜ்ரிவால்களும் உருவாகவே மாட்டார்கள்.
- அன்னா ஹசாரே

* எனக்கு சாப்பிடும் முன் 115 என்றளவிலும், சாப்பிட்ட பின் 125, 130 எனும் அளவிலும் சுகர் இருக்கிறது
- துரைமுருகன்.