தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூட்டப்பட இருக்கிறது. நாளை மாலை 5 மணியளவில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்தியாவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸ் நோய் தற்போது தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்து இருக்கிறது. இன்றைய நிலவரப்படி 834 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 8 பேர் பலியாகி இருக்கின்றனர். 21 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பி இருப்பதாக சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.
கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. கடைகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் மூடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் இருக்க அரசு அறிவித்திருக்கிறது. அத்தியாவசிய தேவைகளை வேறு எக்காரணம் கொண்டும் மக்கள் வெளிவரக் கூடாது எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே வரும் 14ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய இருக்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் மேலும் சில வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மத்திய அரசும் அதுகுறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதனிடையே தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை கூட்டப்பட இருக்கிறது. நாளை மாலை 5 மணியளவில் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெறும் அமைச்சரவையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஏற்கனவே இந்தியாவில் முதல் மாநிலமாக ஒடிசாவில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Apr 10, 2020, 3:14 PM IST