மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்க ஆட முடியாது எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் எனவும் மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. 

கடந்த 10 நாட்களாக பல்வேறு பிரச்சனை காரணமாக நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. 

இதனிடையே தமிழத்திற்கு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. மத்திய அரசும் கால தாமதம் செய்து வருகிறது. 

இதனிடையே தமிழக சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மீன்வளத்துறை  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் நாங்க ஆட முடியாது எனவும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிப்பது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் எனவும் தெரிவித்தார்.