Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு தமிழ் பேசும் மக்களுக்கானது அல்ல.. ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முட்டுகொடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி..!

ஆளுநர் ரவி தமிழ்நாடு என்று அழைப்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

tamilnadu issue... Subramanian Swamy supports Governor R.N.Ravi
Author
First Published Jan 7, 2023, 10:56 AM IST

தமிழ்நாட்டை தமிழகம் என சொல்வதே சரியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு சுப்பிரமணியன் சுவாமி ஆதரவு குரல் கொடுத்துள்ளார். 

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை கூறி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களைச் சிறப்பிக்கும் வகையில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி தமிழ்நாடு என்று அழைப்பதைவிட தமிழகம் என்ற பெயரே பொருத்தமாக இருக்கும் என கூறியிருந்தார். இவரது பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;- தமிழ்நாடு வரலாறு பற்றி ஆர்எஸ்எஸ் பிரசாரக்காரருக்கு என்ன தெரியும்? ஆளுநருக்கு வைகோ கடும் கண்டனம்

tamilnadu issue... Subramanian Swamy supports Governor R.N.Ravi

இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, வைகோ, அமைச்சர் உதயநிதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.  மேலும் டுவிட்டரில் தமிழ்நாடு என்பது டிரெண்டிங்கில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவியின் பேச்சுக்கு பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி ஆதரவு தெரிவித்துள்ளார். 

 

 

 

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பகுப்பாய்வில் அனைத்து இந்தியர்களும் ஒரே மாதிரியான டிஎன்ஏவை கொண்டுள்ளனர். தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம். திராவிடம் என்பது ஆதி சங்கரரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும். ஆரியன் என்பது போலியான ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட வார்த்தையாகும் என கூறியுள்ளார். 

இதையும் படிங்க;- ஆளுநரின் கருத்துக்கு கமல்ஹாசன் கண்டனம்... வாழ்க தமிழ்நாடு என பல மொழிகளில் டிவீட்!!

Follow Us:
Download App:
  • android
  • ios