நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 4.56 லட்சம் கோடியாக இருக்கும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது,  மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டசபையில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.  இந்நிலையில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.25 சதவீதமாக இருக்கும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக பொருளாதார வளர்ச்சி விகிதம்,  தேசிய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட   அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் கடன் 4. 56 லட்சம் கோடியாக  இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது .  மாநிலத்தின் மொத்த வருவாய் 2 ,19, 375 கோடியாகவும்,   செலவு 2, 41  606 கோடியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   மொத்தத்தில் பற்றாக்குறை 22, 526 கோடியாக உள்ளது .  அதேபோல் 2020-2021 ஆம் நிதியாண்டில் அதிக விளைச்சல் தரும் பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும்,   தானிய உற்பத்தியை அதிகப்படுத்த பயறு வகைகள் ,  மற்றும்  சிறுதானியங்கள் மற்றும் பருத்தியில் அதிக விளைச்சல் தரும் ரக பயிர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 

கடுமையான தண்ணீர் பஞ்சத்திற்கு மத்தியில் சிக்கனமாக நீரை பயன்படுத்தும் வகையில்  திருத்திய நெல் சாகுபடி முறை  27 .18 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .  மொத்தத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில்,  தனியார் கல்வித்துறைக்கு 34, 181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, தொல்லியல் துறைக்கு 31. 93 மணி கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது மின்சாரத் துறைக்கு 20 , 115 . 58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .