Asianet News TamilAsianet News Tamil

ஏடாகூட பிளான் , வதைபடும் மாணவர்கள்...!! செங்கோட்டையனுக்கு புத்தி சொல்லும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்...!!

ஆசிரியர்களும் குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியாமல் கற்பித்தலுக்கு வாய்ப்புத்தராததால் மாணவர்களுக்கு வெற்றிப்பாதிக்குமோ என்று மனஉளைச்சலில் உள்ளார்கள். 

tamilnadu government teachers advice to school education deportment  regarding training classes
Author
Chennai, First Published Feb 12, 2020, 12:09 PM IST

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சி வழங்குவதால்  கற்பித்தல் பணியை பெருமளவில்  பாதிக்கப்படுகிறது எனவே, 
அனைத்துவகை பயிற்சிகளையும் ரத்து செய்திட வேண்டும் என  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதுகுறித்து தெரிவித்துள்ள அச்சங்கம்,  10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தொடர் பயிற்சிக்கு தினந்தோறும் செல்வதால் மாணவர்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

tamilnadu government teachers advice to school education deportment  regarding training classes

 ICT, IED, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் நிஷ்தா மற்றும் பாடங்கள் வாரியாக பயிற்சிகள் என ஒரு பயிற்சி முடிந்தால் அடுத்தப்பயிற்சி என தொடர்ந்து ஆசிரியர்கள் செல்வதால் புதியப்பாடத்திட்டம் வினாத்தாள் முறை மாற்றம் போன்ற நிலையில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணியினை செய்யவிடாமல் மாணவர்களை பொதுத்தேர்வுக்கு தயாரக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகளில் கற்பித்தல் பணியை தவிர ஏதாவது ஒரு பயிற்சிக்கு ஆசிரியர் செல்லும் நிலையே உள்ளது.
 மேற்கண்ட பயிற்சிகள் அவசியமானது வரவேற்க கூடியது என்றாலும் அப்பயிற்சிகள் நடத்துவதற்கான காலம்இதுவல்ல. இதனால் தேர்வுகாலங்களில் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாதிப்புள்ளாகுகின்றனர். 

tamilnadu government teachers advice to school education deportment  regarding training classes

ஆசிரியர்களும் குறிப்பிட்ட இலக்கை எட்டமுடியாமல் கற்பித்தலுக்கு வாய்ப்புத்தராததால் மாணவர்களுக்கு வெற்றிப்பாதிக்குமோ என்று மனஉளைச்சலில் உள்ளார்கள். பள்ளிக்கல்வித்துறையின் மாநிலப்பாடத்திட்டத்தில் கற்பிக்கும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கு இப்பயிற்சிகள் வழங்கப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துப்பயிற்சி களும் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் நடத்திட ஆவனசெய்யவேண்டுகின்றோம். மேலும்  பொதுத்தேர்வெழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவதால் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கும் அனைத்துவகை பயிற்சிகளும் ரத்துசெய்திடும்படி மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்.

Follow Us:
Download App:
  • android
  • ios