Asianet News TamilAsianet News Tamil

ஆசிரியர்களை கட்டாயப்படுத்த முடியாது - தமிழக அரசு பதில் மனு...

tamilnadu government said not compel for teachers
tamilnadu government said not compel for teachers
Author
First Published Aug 18, 2017, 1:05 PM IST


அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டயப்படுத்த முடியாது என தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்துள்ளது. 

அரசுப் பள்ளியில் பயிலும் தன்னுடைய மகனுக்கு ஆங்கில வழி கல்வி வேண்டும் என்று ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை முறையாக செய்ய தவறினால் மாணவர்களை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறினார். 

மேலும், அரசு பள்ளிகளில் அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 20 முக்கிய கேள்விகளை நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு எழுப்பினார். 

இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கோரி வழக்கை ஒத்திவைத்தார். 

இந்நிலையில், இன்று தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. அதில், அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க கட்டயப்படுத்த முடியாது எனவும், கட்டமைப்பு வசதிகளுக்காக பிள்ளைகளை பெற்றோர் தனியார் பள்ளியில் சேர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. 

மேலும், அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கங்களுக்கும் தடை விதிக்க முடியாது எனவும் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. 

நீதிமன்றத்தின் கேள்விகளும் நியாயமானதுதான் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios