Asianet News TamilAsianet News Tamil

7 பேர் விடுதலை... உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திடீர் பல்டி..!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய, ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு  தெரிவித்துள்ளது. 
 

Tamilnadu government's sudden plea
Author
Tamil Nadu, First Published Jul 12, 2019, 6:34 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய, ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு  தெரிவித்துள்ளது. Tamilnadu government's sudden plea

ராஜூவ்காந்தி கொலை வழக்கில், சிறையில் உள்ள நளினி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியல் சாசன அதிகாரம் கொண்ட ஆளுநர், அமைச்சரவையின் பரிந்துரை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நளினி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், ஆளுநருக்கு சட்ட பாதுகாப்பு இருந்தாலும், அமைச்சரவை பரிந்துரை மீது எந்த முடிவும் எடுக்காமல் இருக்க முடியாது எனவும் வாதிடப்பட்டது. Tamilnadu government's sudden plea

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் நாராயணன், ஆளுநருக்கு சட்டப்பாதுகாப்பு இருப்பதால், இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு, நீதிமன்றம் உத்தரவிட முடியாது என தெரிவித்தார். மேலும், 7 பேர் விடுதலை விவகாரத்தைப் பொறுத்தவரை, அது ஆளுநரின் பரிசீலனையில் நிலுவையில் இருப்பதாகவும் தமிழக அரசின் வழக்கறிஞர் கூறினார்.Tamilnadu government's sudden plea

இரு தரப்புவாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எழுத்துப் பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தேதி குறிப்பிடாமல், விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios