Asianet News TamilAsianet News Tamil

ஒட்டு மொத்த அரசு ஊழியர்களையும் அசரவைத்த எடப்பாடியார்... அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அசத்தல்..!

அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

tamilnadu government Employees Retirement increase
Author
Tamil Nadu, First Published May 7, 2020, 11:23 AM IST

அரசு பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தை பொறுத்த வரையில் பல லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களுக்கான வயது வரம்பு என்பது 58ஆக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு பொருளாதார சிக்கி தவித்து கொண்டிருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண பணிகள் என பல்வேறு தரப்பில் இருந்தும் நிதியை ஒதுக்கி கொரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

tamilnadu government Employees Retirement increase

இந்நிலையில், இந்த வருடம் அதிகளவில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் பட்சத்தில் அவர்களுக்கான ஓய்வுதியம் வழங்குவதற்கான தேவை தற்போது உருவாகி உள்ளது.  எனவே அதனை கருத்தில் கொண்டு இந்த தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வருடத்தில் ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வருடம் உயர்த்தி அடுத்த வருடமாக மாற்றப்பட்டுள்ளது. 

tamilnadu government Employees Retirement increase

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசின் பணியாளர்களின் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 வயதாாக உயர்த்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios