Asianet News TamilAsianet News Tamil

Tamilnadu Floods: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.. 15 ஆம் தேதி வரைக்கும் வச்சு செய்யபோகுதாம்..!! முழு விவரம் உள்ளே.

12.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

Tamilnadu Floods: Shocking over shocking ..Rain warning till 15th .. !! Full details inside.
Author
Chennai, First Published Nov 11, 2021, 12:49 PM IST

நேற்று நிலைகொண்டிருந்த தாழ்வு மண்டலம் தற்பொழுது சென்னைக்கு  கிழக்கு தென் கிழக்கே சுமார் 130  கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த  12 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு  ஆந்திரா கடற்பகுதிக்கும் வடதமிழக கடற்பகுதிக்கும் இடையில் சென்னைக்கு அருகே இன்று மாலை கடந்து செல்லும். இதன் காரணமாக திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம்  மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் தரைக்காற்று 40 முதல் 45  கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 

என்றும் 11.11.2021:: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும்,  தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்,  ஏனைய வட  மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான  மழையும், தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான  மழையும் பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

Tamilnadu Floods: Shocking over shocking ..Rain warning till 15th .. !! Full details inside.

12.11.2021: நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

13.11.2021:, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

14.11.2021:  திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

15.11.2021: உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின்  சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய  கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக   மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 
அதி கனமழை 3 இடங்களிலும் மிக கனமழை 23 இடங்களிலும் கனமழை 21 இடங்களிலும்  பதிவாகியுள்ளது.

Tamilnadu Floods: Shocking over shocking ..Rain warning till 15th .. !! Full details inside.

தாம்பரம் (செங்கல்பட்டு ) 23, சோழவரம் (திருவள்ளூர்) 22, எண்ணூர்  (திருவள்ளூர்) 21, கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர) தலா 18, மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 17, சென்னை (நுங்கம்பாக்கம்) (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), பெரம்பூர் (சென்னை) தலா 16, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), அம்பத்தூர் (திருவள்ளூர்) எம்ஜிஆர் நகர் (சென்னை), எம்ஆர்சி நகர் (சென்னை) தலா 15, சென்னை விமான நிலையம் (சென்னை), தரமணி  (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), அய்யனாவரம் (சென்னை), ஏசிஎஸ் கல்லூரி (சென்னை) தலா 14, செம்பரபாக்கம் (திருவள்ளூர்), பொன்னேரி (திருவள்ளூர்), வில்லிவாக்கம் (திருவள்ளூர்), தாம்பரம் இந்திய விமானப்படை (செங்கல்பட்டு) தலா 13, சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), திருப்போரூர் (செங்கல்பட்டு), தொண்டையார்பேட்டை (சென்னை) தலா 12, பூந்தமல்லி (திருவள்ளூர்), திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு),  காட்டுக்குப்பம்  (காஞ்சிபுரம்), திரூர் (திருவள்ளூர்), மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) தலா 11, செங்கல்பட்டு (செங்கல்பட்டு), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), திருவள்ளூர் (திருவள்ளூர்), செய்யூர் (செங்கல்பட்டு), மரக்காணம் (விழுப்புரம்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா 10.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  
வங்க கடல் பகுதிகள் 11.11.2021 : வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். 
தென் தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40  முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்  வீசக்கூடும். 12.11.2021:மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்
.
 

Follow Us:
Download App:
  • android
  • ios