Asianet News TamilAsianet News Tamil

அடங்காத ரஜினிக்கு அழகிரி கொடுத்த அட்வைஸ்...!! அரசியலுக்கே வராம எதுக்கு இந்த அலப்பறை...??

நடிகர் ரஜினிகாந்த் 1991 சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டு 1992 , 1996 சம்பவங்களை  நினைவு கூறாமல் மூடி மறைத்தது ஏன்.?

tamilnadu congress president ks alagiri advice to alagiri regarding periyar controversy speech
Author
Chennai, First Published Jan 22, 2020, 1:44 PM IST

சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50 வது ஆண்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தேவையில்லாமல் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பாக தந்தைப் பெரியார் பங்கேற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு  பேரணியில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து கருத்து கூறியிருப்பது பலத்த  சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றன .  இந்தக் கருத்து அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதப்பட்டு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன .  அரசியலுக்கு வருவதற்கு  எண்ணம் உறுதியாக  வராத நிலையில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இத்தகைய அரசியல் சார்பான கருத்துக்களை தவிர்க்க வேண்டும் . அதற்கு மாறாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ் சமுதாயத்திற்கு விடியலை பெற்றுதந்து ,  சமூக நீதியை நிலைநாட்டுவதற்கு தமது வாழ்நாளை அர்ப்பணித்த தந்தை பெரியாரை சிறுமைப்படுத்துகிற வகையில் கருத்துக் கூறியிருப்பதை  தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் 

tamilnadu congress president ks alagiri advice to alagiri regarding periyar controversy speech


.1971இல் நடந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் 1992 டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து  அடுத்து வெளிவந்த வார இதழின் அட்டைப்படத்தில் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க கருப்பு வர்ணத்தை பூசி தலையங்கத்தில் அயோத்தியில் நடந்த அயோக்கியத்தனம் என்று கடுமையாக விமர்சனம் செய்ததை ஏன் நினைவு கூறவில்லை.?  அதேபோல் 1996ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அராஜக ஊழல் ஆட்சியை அகற்றுவதற்கு திமுக ,  தாமாக கூட்டணியை ஏற்படுத்துவதற்கு நடிகர் ரஜினிகாந்த் எடுத்த முயற்சிகள் குறித்தும் அதற்கு துக்ளக் ஆசிரியர் சோ  துணைபுரிந்ததையும்  துக்ளக் ஆண்டு விழாவில்  சுட்டிக்காட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக   அமைந்திருக்குமே.?   நடிகர் ரஜினிகாந்த் 1991 சம்பவத்தை மட்டும் குறிப்பிட்டு விட்டு 1992 , 1996 சம்பவங்களை  நினைவு கூறாமல் மூடி மறைத்தது ஏன்.?  இதில் உள்ள அரசியல் வகுப்புவாத உள்நோக்கம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கூறுவாரா.? 

tamilnadu congress president ks alagiri advice to alagiri regarding periyar controversy speech

துக்ளக் ஆண்டு விழாவில் கூறிய கருத்தை நியாயப் படுத்துகிற வகையில் , கற்பனையாகக் கூறவில்லை நடந்ததை தான் சொன்னேன் என்று கூறியதோடு இந்த சம்பவம் மறைக்கக்கூடிய சம்பவம் அல்ல ஆனால் மறக்கக் கூடிய சம்பவம் என்று விளக்க உரை கூறியிருக்கிறார் .  1992 ,1996 சம்பவங்களை மறைத்துவிட்டு மறக்கக்கூடாத சம்பவமாக 1971 சம்பவத்தை மட்டும்  நினைவுடன் கூறியது ஏன்.? நடிகர் ரஜினிகாந்த் மீது எங்களுக்கு இன்னும் இருக்கிற மதிப்பின் அடிப்படையில் ஒரு வேண்டுகோள் நடிகர் ரஜினிகாந்த் அவர்களே நீங்கள் எப்படி வேண்டுமானாலும் இருங்கள் அதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவுசெய்து இறையாகி விடாதீர்கள் என்று அன்போடு உங்களை கேட்டுக்கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ் அழகிரி தன் அறிக்கையில் கூறியுள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios