தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது நிலையை எட்ட வாய்ப்பு இருக்கிறது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி தெரிவித்துள்ளார் தற்போது வரை இந்த வைரஸ் இரண்டாம் கட்டத்தில் உள்ளது ,  இதே நிலையில் வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , இதுவரையில் சுமார் 738  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது ,  மேலும் இது குறித்த செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நோய் தொற்று உள்ளவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.   மற்றும் அவர்களின் அருகில் வசிப்பவர்களுக்கும் சோதனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்...

மாநிலம் முழுவதும் விரிவாக வைரஸ் பரிசோதனை செய்யப்படும் ,  அதற்காக சுமார் நான்கு நான்கு லட்சம் (ராபிட் கிட்டுகள்) அதிவிரைவு பரிசோதனை கருவிகள் வாங்கப்பட்டுள்ளது அது விரைவில் நமக்கு கிடைக்கும் என்ற அவர் இன்று இரவுக்குள் தமிழகத்திற்கு  50 ஆயிரம் அதிவேக பரிசோதனைக் கருவிகள் கிடைக்கும் அதனை வைத்து பரிசோதனைவை விரிவு படுத்த உள்ளோம் என்றார்,  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் இந்த வைரஸ் மூன்றாவது கட்டத்தை எட்டும் நிலை உள்ளது என அவர் எச்சரித்துள்ளார்.  எனவே பொதுமக்கள் அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.  இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார்.  இந்நிலையில் ஊரட்கு உள்ள நிலையில்  12 நலவாரியங்களில் உள்ள  8. 2லட்சம் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மைலாப்பூர் காவல் பணியில் ஈடுபட்டு பணியில் உயிரிழந்த போக்கு வரத்து காவலர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   வைரஸ் தாக்கத்தை பொறுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என அவர்  தெரிவித்துள்ளார் 

தமிழகத்தில்  துரதிஷ்டவசமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறார்கள், ஆனாலும் மருத்துவர்கள் , செவிலியர்கள் அற்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இன்னும் மனம் தளராமல் உழைக்க நாம் அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்,  கொரோனா நிதி தொடர்பாக மற்றவர்கள் சொல்வதற்கு முன்னர்,  மத்திய அரசுக்கு விளக்கமாக கடிதம் எழுதியுள்ளோம்,  அதற்கு இதுவரையில் பதில் இல்லை என அவர் தெரிவித்துள்ளார் . பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத வேண்டியது மிகவும் அவசியமானது, பத்தாம் வகுப்பு தேர்வு என்பது மிக முக்கியமானதேர்வு  அதை தவிர்க்க முடியாது என்றார். அதேபோல் கொரோனா  பாதிப்பு உள்ளவர்கள் அதை மறைத்தால் அவர்கள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார் .  கொரோனாவை  இரண்டாவது நிலையிலேயே கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,  அனைத்து அரசு ஊழியர்களும் உயிரை பணயம் வைத்து பணி செய்து வருகிறார்கள் மக்கள் வீடுகளில் இருந்து ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இதை இரண்டாவத்து கட்டத்தில்லேயே தடுக்க முடியும் என அவர் கேட்டுக்கொண்டார்...