மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கவேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இந்த 100 நாள் வேலை திட்டமும் ஒன்று. 2021-2022 ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3,524.69 கோடியில் மொத்தத் தொகையும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு இந்த திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால், இன்றுள்ளவாறு (நவம்பர்.01) 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளது. இந்த நிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் வழங்கவேண்டிய தொகையினை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதுக்குறித்து அவர் எழுதியுள்ள கடித்தத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கிராமப்புறங்களில் நிலையான வாழ்வாதார வாய்ப்பாகக் கருதப்படுகிறது என்றும், தற்போது ஊதியம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், பல ஆயிரக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது கிராமப்புற மக்கள் வேலைவாய்ப்புக்காக நகர்ப்புறத்தை நோக்கி இடப்பெயர வழிவகுக்கும் என்பதனைச் சுட்டிக்காட்டிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பண்டிகைக் காலத்தினைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தினை வழங்கிட ஏதுவாக, உடனடியாக நிதியினை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுகொண்டுள்ளார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றியவர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக கூறிய மு.க.ஸ்டாலின், கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒரு நிதியாண்டில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வேலைவாய்ப்பில் அதிகபட்சம் நூறு நாட்கள் உடலுழைப்பை வழங்கும் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் 100 நாள் வேலை திட்டமும் ஒன்று என்றும் 2021-2022 ஆம் நிதியாண்டில் மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ரூ.3,524.69 கோடியில் மொத்தத் தொகையும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை தொழிலாளர்களின் கணக்கில் வரவு வைத்து முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதன்பிறகு இந்த திட்டத்திற்கு நிதி ஏதும் விடுவிக்காத காரணத்தால், சுமார் 1178.12 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் வழங்கப்படாமல், நிலுவையாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, தொழிலாளர்களுக்கு உரியத் தொகையை வழங்கும் வகையில், தமிழகத்துக்கு உடனடியாக தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.