Tamilnadu CM Edappadi Palanisamy Pressmeet
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை பார்க்க தான் மறுப்பு தெரிவிக்கவில்லை என்றும், ஊடக பரபரப்புக்காகவே ஸ்டாலின் திட்டமிட்டு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி வன்முறை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் 20 எம்எல்ஏக்கள் சென்றனர். ஆனால், முதலமைச்சரை சந்திக்க அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனையடுத்து, ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள், முதலமைச்சர் அறை முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் ஸ்டாலினை குண்டுகட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர். இதையடுத்த அவர்கள் தலைமை செயலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தலைமை செயலகம் வாயிலில் திமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் உள்ளிடோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மு.க.ஸ்டாலின் உண்மைக்கு மாறாக கூறுகிறார் என்றும், ஸ்டாலினை சந்திக்க நான் மறுப்பு தெரிவிக்கவில்ல்லை என்றார். ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்த வேண்டுமென்றே ஸ்டாலின் திட்டமிட்டு நடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.

தூத்துக்குடியில் 144 தடை உத்தரவையும் மீறி சில விஷமிகளும், சில அரசிய்ல கட்சி தலைவர்களும் அப்பாவி பொதுமக்களை பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சாட்டினார். வன்முறையில் ஈடுபட்டடவர்கள் தாக்கியதில் தற்காப்புக்காகவே போலீசார் தடுப்பு நடவடிக்கை எடுத்ததாக கூறினார். ஊர்வலம் சென்றவர்கள் போலீசாரை தாக்கியதால் கண்ணீர்புகைகுண்டு வீச்சு, தடியடி நடத்தப்பட்டது. வேண்டுமென்றே அப்பாவி பொதுமக்களை சிலர் தூண்டிவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்டதால் போராட்டம் மோசமான நிலையை அடைந்திருக்கிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி அளித்தது யார் என்பது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க மறுத்துவிட்டார்.
