திடீரென தூக்கி அடிக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன்..! எடப்பாடி டென்சன் ஆனதன் பின்னணி..!
யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது ஆளுநர் மாளிகை. அதாவது தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சராக இருந்த மணிகண்டன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும் அந்த இலாகாவை கூடுதலாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கவனிப்பார் என்றும் ஆளுநர் மாளிகை கூறியிருந்தது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல் முறையாக தமிழகத்தில் அமைச்சர் பதவியை ஒருவர் இழந்துள்ளார்.
யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நேற்று இரவு ஒரு அறிவிப்பை வெளியிட்டது ஆளுநர் மாளிகை. அதாவது தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சராக இருந்த மணிகண்டன் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றும் அந்த இலாகாவை கூடுதலாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கவனிப்பார் என்றும் ஆளுநர் மாளிகை கூறியிருந்தது.
இப்படி ஒரு அறிக்கை ஆளுநர் மாளிகையில் இருந்து வந்ததை யாராலும் நம்பவே முடியவில்லை. காரணம் எடப்பாடி அரசோ அப்பவோ இப்பவோ என்று தான் இருக்கிறது, எந்த நேரத்தில் யார் கட்சி மாறுவார்கள் என்று தெரியாத சூழலில் ஒரு அமைச்சரை பதவியில் இருந்து நீக்கி அவரை பகைத்துக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்தன. ஆனால் அது எல்லாம் நேற்று முன் தினம் வரை தான் என்கிறார்கள்.
அமைச்சர் மணிகண்டனை பதவியில் இருந்து நீக்கும் முடிவு நேற்று ஒரே நாளில் எடுக்கப்பட்டது அல்ல என்று கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கேபிள் டிவி சேர்மனாக செயல்பட்டு வந்த ஐஏஎஸ் அதிகாரியை தூக்கிவிட்டு உடுமலை ராதாகிருஷ்ணனை அந்த பதவிக்கு நியமித்த போதே அமைச்சர் மணிகண்டன் பதவி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டதாக சொல்கிறார்கள். அரசு கேபிளை பொறுத்தவரை எடப்பாடி மட்டும் அல்ல முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கும் அது ஒரு அட்சய பாத்திரம்.
மாதம் மாதம் வரும் வசூலை காட்டிலும் தங்களது இமேஜை மேக் ஓவர் செய்து கொள்ள அரசு கேபிள் வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் தான் அரசு கேபிள் விவகாரத்தில் ஜெயலலிதா மிகவும் கவனமாக இருப்பார். அந்த வகையில் மாமூல் விவகாரங்கள் மட்டும் அல்லாமல் சேனல் உரிமையாளர்களுடன் மணிகண்டன் நட்பு பாராட்டி சில எல்லைகளை தாண்டியதாக உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் தான் உடுமலை ராதாகிருஷ்ணனை இந்த விவகாரத்திற்குள் நுழைத்துள்ளது.
கேபிள் டிவி விவகாரத்தில் ஆப்பரேட்டர்கள் சிலருக்கு சாதகமாகவும் மணிகண்டன் செயல்பட்டதாக கூறுகிறார்கள். மேலும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வந்த சில ஆப்ரேட்டர்கள் அரசு கேபிளுக்கு மாறாமல் இருந்ததன் பின்னணியிலும் அமைச்சர் மணிகண்டன் இருந்ததாக சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தான் கேபிள் டிவி விவகாரத்தில் அவரை ஓரம் கட்ட உடுமலை ராதாகிருஷ்ணனை எடப்பாடி சேர்மனாக்கினார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக ஊடகங்களுக்கு அமைச்சர் மணிகண்டன் கொடுத்த பேட்டி எடப்பாடியை மிகவும் டென்சன் ஆக்கியுள்ளது. இதனை தொடர்ந்தே உடனடியாக தான் யார் என்று காட்ட அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை அதிரடியாக தூக்கி அடித்துள்ளார் எடப்பாடி. இனி இதே பாணி அரசியல் தொடரும் என்றும் கூறுகிறார்கள்.