அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ள சம்பவம் அதிமுக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். பின்னர், நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர் கரூரில் இரண்டு மிகப்பெரிய அரசியல் சக்திகள் உள்ளனர். ஒருவர் அரவக்குறிச்சி எம்எல்ஏ செந்தில் பாலாஜி. அவருக்கு தோல்வி என்பதே கிடையாது. தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் வெற்றி பெற வைப்பது அவரது வழக்கம்.

 24 மணி நேரமும் உழைத்து வருபவர்களில் அவரும் ஒருவர். மிக பலத்த உழைப்பு காரணமாக இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார். பல்வேறு கட்சிகளிலிருந்து திமுகவுக்கு மாறி வந்தாலும் போட்டியிடும் அனைத்து தேர்தலில் வெற்றி பெறுவது சாதாரணமல்ல. அப்படிப்பட்ட அவரின் உழைப்பை பின்பற்றி நாம் தேர்தல் பணியாற்ற வேண்டும். அனைவரும் முதலில் உழைப்பைக் கொடுத்து விட்டுதான் பின்னர் பேச வேண்டும். 

கரூரில் இதுபோன்ற ஆளுமை சக்திகள் உள்ள நிலையில் உழைப்பை என்றால் எளிதில் வெற்றி கிடைக்காது. அவர்களை விட இரண்டு மடங்கு உழைத்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றார்.  அதிமுக கூட்டணி கட்சியான பாஜகவில் அடுத்தடுத்து தலைவர்கள் திமுகவை  புகழ்ந்து வருவது  அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.